Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இங்க தான் ரேஸ் நடக்குதா? பார்வையாளராய் ட்ராக்குக்குள் வந்த பைரவர்! படாரென ப்ரேக் போட்ட கார்கள்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயத்தின் பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ரேஸ் சர்க்யூட்டில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென நாய் ஒன்று உள்ளே புகுந்ததால் வீரர்கள் சிறிது நேரம் தங்கள் பயிற்சியை நிறுத்தினர். இதனையடுத்து நாய் அங்கிருந்து விரட்டியது.

தெற்காசியாவில் முதல் முறையாக சென்னை அண்ணா சாலையில் உள்ள ரேசிங் சர்க்யூட்டில் இரவு நேர பார்முலா போர் கார்பந்தயம் நடத்தப்படுகிறது. தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த போட்டிகள் நடைபெறுகிறது.

formula 4 race formula 4 race chennai chennai 4

இதற்காக சென்னை தீவுத் திடலை சுற்றி ரேசிங் சர்க்யூட் சுமார் மூன்று புள்ளி ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக போட்டியை நடத்துவதற்காக பல நாட்களாக போட்டிகளுகாக ரேஸிங் சர்க்யூட் தயார் செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று தகுதி சுற்றிப் போட்டிகளும் நாளை முக்கிய போட்டிகளும் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக சென்னை அண்ணா சாலை, பிளாக் ஸ்டாப் ரோடு, தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ரேசிங் சர்க்யூட்டை சுற்றிலும் இரும்பு தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் உள்ளிட்ட யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் வாகனங்கள் திரும்பும் இடங்களில் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்பட்டால் கூட சேதம் ஏற்படாத வகையில் டயர்கள் உள்ளிட்டவை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட சில விவகாரங்கள் காரணமாக 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி உள்ளிட்ட 8 அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக ஆடுகளங்களில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது போல இந்த சர்க்யூட் எப்படி இருக்கிறது? எவ்வளவு வேகம் வரை செல்லலாம்? என்பதை கண்டறிவதற்காக வீரர்கள் தங்கள் கார்களில் அதிவேகமாக பயணித்தனர். மேலும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வீரர்கள் மூலம் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 7 மணிக்கு பயிற்சி போட்டிகளை தமிழ்நாடு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வீரர்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த போட்டிகளை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர் . இந்த நிலையில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென நாய் ஒன்று உள்ளே புகுந்தது. அங்கே சாகசத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை உடனடியாக நிறுத்தினர். இதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் நாயை அங்கிருந்து விரட்டினர். இதனால் சிறிது நேரம் போட்டி தடை பட்டதாக கூறப்படுகிறது. தற்போது நாய் ரேசிங் சர்க்யூட்டுக்குள் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+