Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேர்தல் கிட்ட வந்து விட்டது.. அனைத்து அரசியல் கட்சிகளும் பிஸியாக உள்ளன.. இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.. அதை பற்றி இங்கே சுருக்கமாக நாம் பார்க்கலாம்,.

அதிமுக தன்னுடைய தேர்தல் வியூகங்களை கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்தே தீட்ட தொடங்கிவிட்டது.. தற்போது தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளர் லிஸ்ட் என அடுத்தடுத்த மும்முரங்களை அதிர விட்டு வருகிறது.

EPS AIADMK DMK Tamil Nadu politics NDA alliance AIADMK vs DMK EPS news Edappadi Palaniswami political strategy DMK VIP seats election 2026 TN politics constituency battle BJP vs DMK AMMK vs DMK Tamil nadu assembly election 2026 TN Election Special NDA vs 2026 vs vs 2026

அந்தவகையில் திமுகவின் வலுவான கோட்டைகளாகவும், அதேசமயம் தற்போதைய அமைச்சர்களின் சொந்தத் தொகுதிகளாகவும் கருதப்படும் இடங்களை அதிமுக தன்னுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியிருப்பது ஒரு சூப்பரான ராஜ தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.

என்டிஏ கூட்டணி

இந்த அதிரடி மாற்றங்கள் வரவிருக்கும் தேர்தலில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான நேரடிப் போட்டியை தாண்டி, பலமுனைப் போட்டியில் யாருடைய கை ஓங்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

அதிமுகவின் இந்த வியூகத்தின்படி, திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி ஐஜேகே கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம், முத்துசாமியின் ஈரோடு மேற்கு மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் காந்தியின் ராணிப்பேட்டை ஆகிய 3 முக்கியத் தொகுதிகளும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.

திமுக விஐபி தொகுதிகள்

கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க இந்தத் தொகுதிகளை தமாகாவிடம் ஒப்படைத்திருப்பது, அந்தப் பகுதிகளில் பாரம்பரிய வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

அதேபோல தலைநகர் சென்னை மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் திமுகவின் செல்வாக்கிற்கு சவால் விடும் வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனின் சைதாப்பேட்டை மற்றும் டி.ஆர்.பி.ராஜாவின் மன்னார்குடி ஆகிய தொகுதிகள் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் அமமுகவின் வாக்கு சதவீதம் திமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதால், அமைச்சர்களின் தொகுதிகளிலேயே அவர்களை எதிர்கொள்ள அதிமுக தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி வியூகம்

இதில் அனைத்தையும் விட மிக முக்கியமாக, பாஜகவுக்கு, டாப் அமைச்சர்களின் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பனின் திருப்பத்தூர், மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்தூர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜின் பத்மநாபபுரம், பால்வளத் துறை அமைச்சராக இருந்த நாசரின் ஆவடி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளுடன், சபாநாயகர் அப்பாவு பிரதிநிதித்துவப்படுத்தும் ராதாபுரம் தொகுதியும் பா.ஜ.க.வின் வசம் சென்றுள்ளது.

அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் வேரூன்றத் துடிக்கும் பாஜகவுக்கு அமைச்சர்களின் தொகுதிகளையே களமாக கொடுத்திருப்பது, அந்த தொகுதிகளில் கடும் போட்டியை உருவாக்கும் என்றே தெரிகிறது.

அமைச்சர்களின் தொகுதிகளில் அவர்களின் நிர்வாகத் திறன் மற்றும் மக்கள் செல்வாக்கை நேரடியாகச் சோதிக்கும் விதமாக இந்தக் கூட்டணிப் பங்கீடு அமைந்துள்ளது. இதனால் ஆளும் கட்சித் தரப்பில் அமைச்சர்கள் தங்கள் தொகுதியைத் தக்கவைக்க முழு பலத்தையும் பிரயோகிப்பார்கள் என்றாலும், கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த வாக்குகள் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமாக மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக . முகாமில் நிலவுகிறது.

தள்ளி விட்டுள்ளதா அதிமுக

அதேசமயம், திமுக அமைச்சர்களின் தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக "தள்ளி விட்டுள்ளது" என்றும் இதனை எடுத்துக் கொள்ளலாம்..

காரணம் ஆளும் கட்சியின் அதிகார பலமும் பணபலமும் ஒருங்கே குவிந்திருக்கும் அமைச்சர்களின் தொகுதிகளில் நேரடியாக மோதி தன் சக்தியை விரயமாக்குவதை விட, அந்த சவாலை கூட்டணி கட்சிகளிடம் ஒப்படைப்பதன் மூலம் அமைச்சர்களைத் தங்கள் சொந்தத் தொகுதியிலேயே முடக்கி வைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிடுவதாக தெரிகிறது.

பழுத்தால் பழம்

குன்னம் முதல் பத்மநாபபுரம் வரை பரவியுள்ள இந்த வியூகம், அமைச்சர்களுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை அந்தந்தப் பகுதிகளில் செல்வாக்குள்ள பாஜக, தமாகா, அமமுக போன்ற கட்சிகளின் மூலம் ஒருங்கிணைக்க உதவும்.. ஒருவேளை பின்னடைவு ஏற்பட்டால் அது அதிமுகவின் நேரடி தோல்வியாக கருதப்படாது என்ற பாதுகாப்பு வளையத்தையும் எடப்பாடி மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது..

ஆக, ஜெயித்தால் கிரெடிட் அதிமுக தலைமைக்கு... தோற்றால் அது கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பு... என்றாகிவிடும் போல.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+