கர்ப்பிணிகளுக்கு, மருத்துவ அவசரங்களுக்கு.. இலவச கார் சேவை.. பல்லாவரம் ராஜேஷ் அசத்தல்!
சென்னை: சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில் வசிக்கும் எம். ராஜேஷ் கர்ப்பிணிகள் மற்றும் மருத்துவ அவசரங்களுக்கு தனது டாக்சியை இலவசமாக கொடுத்து உதவி வருகிறார்.
கொரோனா பரவல் பிற மாவட்டங்களை விட சென்னையில் மிக அதிகமாக உள்ளது. இதனால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மருத்துவ சேவை தேவைப்படுவோர் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். காரணம் அவர்களுக்குரிய வாகன வசதி உள்ளிட்டவை கிடைக்கவில்லை என்பதால். இந்த சூழலில்தான் சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த எம். ராஜேஷ் என்பவர் மகத்தான சேவை ஒன்றை செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வணக்கம். எனது பெயர் M.ராஜேஷ் சென்னை பல்லாவரம் அருகில் உள்ள அனகாபுத்துரில் வசிக்கிறேன். எங்கள் நிறுவனம் Lakshmi Travels.
நாங்கள் ஊரடங்கு உத்தரவு காலத்தில் சென்னையில் வசிக்கும் கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு மருத்துவ மனைக்கு செல்ல எங்கள் நிறுவனம் சார்பில் இலவச கார் சேவை அளிக்கின்றோம். எங்கள் சேவையை சென்னை எல்லைக்குள் மட்டும் கொடுக்கிறோம்.
மேலும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் மற்ற மாவட்டம் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு சிகிச்சைக்கு செல்ல குறைந்த வாடகைக்கு கார் வாடகைக்கு தருகிறோம். இதுவரை சென்னையில் சுமார் 25 கர்ப்பிணி பெண்கள் எங்கள் இலவச சேவை மூலம் பயன் பெற்றுள்ளனர். சென்னையில் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல ஒரு ரூபாய் கூட வாங்குவதில்லை என்று கூறியுள்ளார்.
ராஜேஷின் தொடர்பு எண்கள்: 7358219119, 8608321662
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications