Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ.18 கோடி வீட்டுமனை பட்டா.. வாழ்க்கையில் திருப்பம்.. அரசு ஸ்வீட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய்த்துறை சார்பாக, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டம், கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி மற்றும் அரசுப் பண்ணை, மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாக்களில் 158 நரிக்குறவர் பிரிவு பயனாளிகள் உட்பட்ட மொத்தம் 299 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகளை வழங்கினார்.

சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை அருகே அமைந்துள்ள கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி பகுதியில், நரிக்குறவர் பிரிவைச் சேர்ந்த 158 குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றன.

Narikuravar families Free Land Patta

சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த பழங்குடியினர் சமூகத்தினருக்கு, காலம் காலமாக அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளன.

டாக்டர் கலைஞர் - நரிக்குறவர்

முதலமைச்சராக கலைஞர் இருந்த காலகட்டத்தில், "நரிக்குறவர்" என்ற சொல்லை பயன்படுத்துவது கண்ணியக் குறைவு என கருதி, அவர்களை மரியாதையுடன் "நறி தவறாதவர்கள், நரிக்குறவர்கள்" என்று அழைக்க வேண்டும் என பெயர்ச்சொல் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் சமூக மரியாதையும் அடையாளமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், 1980ம் ஆண்டு இப்பகுதியில் வசித்து வந்த நரிக்குறவர் மக்களுக்கு முதன்முறையாக வாக்குரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அவர்கள் ஜனநாயகப் பண்பாட்டில் முழுமையாக இணைக்கப்பட்டனர்.

தமிழக அரசு வீடு

அந்த காலகட்டத்தில், இப்பகுதி மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வந்த காரணத்தால், அடிக்கடி தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. இதனை கருத்தில் கொண்டு, குடிசை வீடுகளுக்கு மாற்றாக ஹாஸ்பெடாஸ் ஓடுகள் பதித்த வீடுகள் கட்டி வழங்க அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது, கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் மக்களுக்கு நிரந்தர குடியிருப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில், 158 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடமாகும். முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு உரிய தடையின்மைச் சான்று பெற்று, ரூ.18 கோடி மதிப்பிலான இந்த இடத்தை நரிக்குறவர் மக்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டாக்களாக வழங்கியுள்ளது.

பட்டா தந்த அமைச்சர்

அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய்த்துறை சார்பில், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டத்திற்கு உட்பட்ட கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி மற்றும் அரசுப் பண்ணை, மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்று, நரிக்குறவர் பிரிவு பயனாளிகள் 158 பேர் உட்பட மொத்தம் 299 பயனாளிகளுக்கு இந்த இலவச வீட்டுமனை பட்டா ஆணைகளை வழங்கினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முதலமைச்சர் மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு எண்ணற்ற அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பழங்குடியினர் சமூக மக்களான நரிக்குறவர்கள் நலனுக்காக குடியிருப்பு வசதி, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்ற அரசால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

இந்த இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம், நரிக்குறவர் மக்களுக்கு நிரந்தர வாழ்விடத்தையும் பாதுகாப்பான எதிர்காலத்தையும் உறுதி செய்யும் முக்கியமான முயற்சியாக கருதப்படுகிறது.

அண்ணா பல்கலை இடம்

சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை அருகே உள்ள கோட்டூர்புரம் பகுதியில் 158 நரிக்குறவர் குடும்பமாக வசித்து வருகிறார்கள். தற்போது, கோட்டூர்புரம், ஜிப்ஸ் காலனி பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு நிரந்தர இருப்பிடம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் 158 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடமாகும்.

முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசின் மூலம் உரிய தடையின்மைச் சான்று பெறப்பட்டு 18 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் இப்பகுதி மக்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டாக்களாக வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+