இலவச விடியல் பேருந்து ஓகே.. ஆனால் ஓட்டு.. 38% லட்டு போல தவெக பக்கம் சாய்ந்த பெண் வாக்குகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களின் ஆதரவு என்பது தமிழக அரசியல் மாற்றத்துக்கு அவசியமான ஒன்றாகும்.. எந்தவொரு அரசியல் கட்சியும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும், பெண்களின் மனவோட்டம் என்னவோ நிதானமான கணக்குகளை வைத்தே நகர்கிறது.. அவர்கள் வெறும் குடும்பத் தலைவிகள் மட்டுமல்ல, ஒரு ஆட்சியின் தலையெழுத்தையே மாற்றும் அமைதியான புரட்சியாளர்கள் என்றே சொல்லலாம். அந்தவகையில் இன்றைய எக்ஸிட் போல்கள் தந்துள்ள ஆச்சரியம் என்ன தெரியுமா?

தமிழகத் தேர்தல் களம் என்றாலே அது பெண்களின் கைகளில்தான் இருக்கிறது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.. வாக்குச் சீட்டில் யாரைத் தேர்வு செய்வது என பெண்கள் தீர்மானிக்கிறார்கள். இதை கடந்த சில தேர்தல்கள் மிகத் தெளிவாகவே நமக்குக் காட்டியுள்ளன..

Free womens vidiyal buses Rides

பெண்கள் - கேம் சேஞ்சர்

நிர்வாக திறனையும் தாண்டி, பெண்களின் வாக்குகளைத் தீர்மானிப்பது அன்றாட வாழ்வியல் பாதுகாப்பே.. குறிப்பாக, 2021 தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பஸ் பயணம் ஒரு மிகப்பெரிய கேம்-சேஞ்சராக அமைந்தது..

இது வெறும் பயணச் சலுகையல்ல, ஒரு பெண்ணின் மாத பட்ஜெட்டில் கணிசமான தொகையை மிச்சப்படுத்திய பொருளாதார விடியல் என்றே சொல்லலாம்.. இதனால்தான், டீக்கடை பெஞ்சுகளில் அரசியல் பேசும் ஆண்களை விட, பேருந்து பயணங்களில் சத்தமில்லாத ஒரு மாற்றத்தை ஆதரிக்கும் பெண்களின் குரல் வலிமையாக ஒலிக்கிறது..

13 சதவீத வாக்குகள்

கடந்த முறை இருந்த ஆதரவை விட 13 சதவீத வாக்குகள் குறைந்து, இப்போது 34 சதவீத பெண்கள் மட்டுமே திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.. இது ஆளுங்கட்சிக்கான ஒரு அபாய எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது..

அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணிக்கும் பெண்களின் ஆதரவு 23 சதவீதம் வரை சரிந்துள்ளது (தற்போது 20%)..

இந்தச் சூழலில், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாக தமிழக வெற்றிக் கழகம், பெண்களின் வாக்குகளைப் பெருவாரியாக லட்டு போல கவர்ந்துள்ளது.. எக்ஸில் போல் கருத்துக்கணிப்பின்படி, 38 சதவீத பெண்கள் தங்களின் ஆதரவை தவெக-விற்கே வாரி வழங்கியுள்ளனர்.

ஆண்களை விட பெண்கள் 38 சதவீதம் ஆதரவு

ஆண்களின் 32% ஆதரவை விட, பெண்களின் ஆதரவு 38% அங்கே அதிகமாக இருப்பது ஒரு மிகப்பெரிய அரசியல் நகர்வு.. "நாங்கள் யாருக்கு ஓட்டுப் போடுகிறோம் என்பதை வெளியே சொல்ல மாட்டோம், ஆனால் சரியான நபரைத்தான் தேர்வு செய்வோம்" என்ற பெண்களின் பிடிவாதம் இந்த முறை ஒரு புதிய மாற்றத்தை நோக்கித் திரும்பியிருக்கிறது..

சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக பாதுகாப்பில் பெண்கள் காட்டும் அக்கறைதான் எப்போதும் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கிறது.. கள்ளச்சாராயம் அல்லது சமூக விரோத செயல்கள் தலைதூக்கும்போது, எந்த பாரபட்சமுமின்றி பெண்களின் கோபம் ஆளுங்கட்சிக்கு எதிராக திரும்புவதை நாம் பார்த்திருக்கிறோம்..

அதேசமயம், பாரம்பரிய கட்சிகளின் மீது ஏற்பட்ட ஒருவித சலிப்பும், புதிய மாற்றத்தின் மீதான நம்பிக்கையுமே பெண்களை இந்த அளவிற்கு ஒரு புதிய திசையை நோக்கி நகர்த்தியிருக்கிறது..

ஆணாதிக்க அரசியல்

இன்றைய பெண்கள், ஆணாதிக்க அரசியலை ஒருபோதும் விரும்புவதில்லை.. ஆனால், ஒரு கட்சியின் மேடைப் பேச்சுகள் பெண்களை எப்படி கையாள்கிறது என்பதை அவர்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.. பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகள் அல்லது ஆணாதிக்கத் திமிர் காட்டும் வேட்பாளர்களை அவர்கள் சைலன்ட்டாக தோற்கடிக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்குக் கிடைக்கும் முன்னுரிமை ஆகியவற்றை வைத்தே அவர்களின் ஆதரவு அமைகிறது..

இலவச விடியல் பேருந்து பயணம்

திமுக அரசின் இலவசப் பேருந்து பயணத் திட்டம் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்குப் பேருதவியாக இருந்தாலும், இந்த முறை 13 சதவீத பெண் வாக்குகள் சரிந்திருப்பது அத்திட்டங்கள் மட்டும் வெற்றியை உறுதி செய்யாது என்பதையே காட்டுகிறது.. அதேசமயம், இத்தகைய நலத்திட்டங்களைத் தாண்டி ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்த்தே 38 சதவீத பெண்கள் தவெக-வை நோக்கித் தங்களின் ஆதரவைத் திருப்பியுள்ளதும் இன்றைய எக்ஸிட் போலில் தெரியவந்துள்ளது.

தமிழக அரசியலில் பெண்கள் இப்போது ஒரு தெளிவான முடிவை நோக்கி நகர்கிறார்கள்.. உணர்ச்சிகளுக்கு பலியாகாமல், கள நிலவரத்தை உணர்ந்து வாக்களிக்கும் இந்த சைலன்ட் ஓட்டர்ஸ் தான் 2026 தேர்தலிலும் முடிவை தீர்மானிக்க போகிறார்கள்.. பெண்களின் இந்த அமைதியான வாக்கு வேட்டை எந்த பக்கம் திரும்புகிறதோ, அங்கே தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.. இதுதான் இப்போதைய எதார்த்தம்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+