கொளுத்தும் வெயில்.. தப்பிக்க ஓஆர்எஸ் பவுடர் வாங்கி குடிக்கிறீர்களா? உஷார் மக்களே! மருத்துவர்கள் எச்சரிக்கை!
சென்னை: கோடை வெப்பத்தில் தாக்கத்தைச் சமாளிக்க ஒ.ஆர்.எஸ் பவுடர்களை வாங்கி குடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வெப்ப அலை குறையும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள பதிவில், வெப்பநிலை படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதால் மேற்கு தமிழ்நாடு மற்றும் வட உள் தமிழகத்தின் உள்ள பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னதான் வெப்ப அலை குறையும் என்று ஒரு குளிர்ச்சியான செய்தி வெளியானாலும், பொது மக்கள் என்னவோ கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்துத்தான் வருகின்றனர்.
இந்த வெயில் காலங்களில் சாலை ஓரங்களில் கிடைக்கும் செய்யப்படும் குளிர்பானங்களின் விற்பனை அமோகமாகவே நடந்து வருகிறது. பலரும் வெப்பத்திலிருந்து தப்பிக்க, கண்ணுக்குத் தெரியாத இன்னொரு ஆபத்திற்குள் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.
இதைப்போன்று சுகாதாரமற்று விற்கப்படும் கோலி சோடா, 10 ரூபாய் கூல் டிரிங்ஸ் ஆகியவற்றை வாங்கி பருகுவது உயிருக்கே கேடு என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இப்படித்தான் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக, அப்படித்தான் தரமற்ற 10 ரூபாய் குளிர்பானத்தைக் குடித்த சென்னை சிறுவன் ஒருவன் ரத்த வாந்தி எடுத்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. உடனடியாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பல கடைகளில் உள்ள குளிர்பானங்களின் தரம் பற்றி ஆய்வு செய்தனர்.
ஆகவே பொதுமக்கள் என்ன மாதிரியான குளிர்பானங்களைக் குடிக்கலாம் என்று ஆலோசனை தருகிறார் பொதுநல மருத்துவர் பிரபாகரன்.
வெயில் போகும்போது கூடவே குடிப்பதற்கான தண்ணீர் பாட்டிலை எடுத்துச் சொல்லுங்கள் என்று மருத்துவர்கள் அனைவரும் சொல்வார்கள்.
அதற்குக் காரணம் என்னத் தெரியுமா? வெயிலில் போகும் போது தாகம் எடுக்கும். உடனே நாம் அருகில் உள்ள ஏதாவது ஒரு கடையில் கிடைக்கின்ற குளிர்பானத்தை வாங்கிக் குடித்துவிடுவோம்.
அந்தக் குளிர்பானம் நன்றாக உள்ளதா? பாட்டில்களில் கிடைக்கும் குளிர்பானம் எப்போது தயாரிக்கப்பட்டது? எவ்வளவு நாள் முன்பாக வாங்கி வைக்கப்பட்டது ? என்பது எதுவே தெரியாது. நம்ம ஊர் சோடாதானே? தரமா தான் இருக்கும் என்று நம்பி விடுவோம்.
அப்படிக் குடிக்கும்போது வாந்தி வரலாம், வயிறு வலி ஏற்படலாம். அல்லது வயிற்றுப் போக்குகூட வரலாம். சில நேரங்களில் ரத்த வாந்தி கூட எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.
அப்படியில்லை என்றால், வயிற்றில் புண் ஏற்பட்டு அசிடிட்டி பிரச்சினை உண்டாகலாம். அதனால் வயிற்றில் கேஸ் பிரச்சினை உண்டாகும். அல்சர் வரலாம்" என்கிறார்

இவரைத் தொடர்ந்து ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் மீனாட்சி, "வெயிலில் அலைத்துவிட்டு, வீட்டுக்குள் வந்ததும் உடனே ஜில் என்று தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு பலருக்கும் வரும். உடனடியாக குளிர்சாதனப் பெட்டியில் உள்ள தண்ணீரை எடுத்துக் குடித்துவிடுவார்கள். அது உடல் நலத்திற்கு நல்லது அல்ல.
அதற்குப் பதிலாகத் தண்ணீரை நன்கு சுடவைத்து அதை வடிகட்டி, மண் பானையில் ஊற்றிவைத்தால் நன்றாகக் குளிர்ந்துவிடும். அதைக் குடிப்பது நல்லது. அது உடலுக்குக் கெடுதல் தராது. உடலை ஹைட்ரேட் செய்ய உதவும்.
குளிர்பானத்தில் 10 முதல் 12 டீ ஸ்பூன் சர்க்கரை உள்ளது. அதைக் குடிப்பதால் உடல்நலத்திற்கு எந்தச் சத்துக்களும் கிடைப்பதில்லை. அதில் ஃபாஸ்பாரிக் ஆசிட் உள்ளது. தேவை அற்ற கலர் கலந்துள்ளார்கள். அது குடல் ஆரோக்கியத்திற்கு உடல் பருமன் ஏற்படும். சர்க்கரை நோய் கட்டாயம் வரும்.
அதற்குப் பதிலாக நீங்கள் பழங்களை ஜூஸ் போட்டுக் குடிக்கும் போது நல்ல சத்துப்பொருட்கள் உடலுக்குக் கிடைக்கின்றன.
அதில் சர்க்கரை போடவேண்டிய அவசியம் இல்லை. அது போல உப்பு. அதிலேயே இயற்கையான சோடியம், பொட்டாஷியம் போன்ற சத்துக்கள் உள்ளன. கூடவே நீர்ச்சத்தும் உள்ளது.
சில பேர் ஹைட்ரேட் ஆக இருக்க வேண்டும் என்று ஒஆர்.எஸ் பவுடர்களை வாங்கிக் குடிக்கிறார்கள். அதைப் போன்று ஒ.ஆர்.எஸ் பவுடர்களை வாங்கிக் குடிக்கவே கூடாது.
உடல் சுகம் இல்லை. சோர்வாக உள்ளது. வாந்தி பேதி வந்து அயர்ச்சியாக இருக்கும் போது ஒரு மருத்துவர் உங்களை ஒ.ஆர்.எஸ் பவுடர்களை குடிக்கச் சொல்லிக் கொடுத்திருப்பார்.

ஆனால், இன்று விளையாடப் போகிறார்கள், ஸ்விமிங் போகிறார்கள் அதை முடிந்தவுடன் ஒரு ஒ.ஆர்.எஸ் பாக்கெட் வாங்கிக் குடிக்கிறார்கள். அதுபோல் குடிப்பது தவறு.
உடலில் உள்ள நீர்ச்சத்தை இழந்துவிட்டால் மட்டுமே ஒ.ஆர்.எஸ் குடிக்க வேண்டும். டிஹைட்ரேட் ஆகிவிட்டோம் என்றால் குடிக்கலாம். அப்போது உடலில் சோடியம் மற்றும் பொட்டாஷியம் குறைந்துவிடும். அதைச் சமன் செய்யக் குடிக்கலாம். சும்மா இருக்கும் போது நீங்களே ஒ.ஆர்.எஸ் பாக்கெட் வாங்கிக் குடிப்பது தவறு" என்கிறார்.












Click it and Unblock the Notifications