நண்பர்கள் காட்டிய தவறான பாதை... சபலத்தில் சிக்கி சகதியில் விழுந்த சஞ்சீவி
சென்னை: நண்பர்கள் காட்டிய தவறான பாதையால் சென்னை விடுதி உரிமையாளர் சஞ்சீவி சபலத்தில் பெரும் பிரச்சினையில் சிக்கிக் கொண்டார்.
திருச்சியைச் சேர்ந்தவர் சஞ்சீவி. பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இவர் கட்டுமான தொழில் செய்து வந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்படவே சென்னைக்கு குடிபெயர்ந்தார்.
இதையடுத்து சென்னையிலும் கட்டுமானத் தொழிலை ஆதம்பாக்கம் தில்லை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொடங்கினார். அப்போதே ஓட்டல், ரியல் எஸ்டேட் தொழில் என செய்து வந்துள்ளார்.

புலம்பல்
பெண்கள் விஷயத்தில் வீக்கான இவர் பெங்களூர், மும்பை ஆகிய இடங்களுக்கு உல்லாசமாக இருக்க பெண்களை அழைத்து சென்று நட்சத்திர விடுதிகளில் தங்குவது, என பணத்தை வாரி இறைத்தார். இதனால் அவர் கட்டி வைத்திருந்த சாம்ராஜ்யம் நொருங்கியது. கடன் கழுத்தை நெரித்தது. இதனால் சோர்வடைந்து எப்போதும் நண்பர்களிடம் புலம்பி கொண்டே இருப்பாராம்.

பெண்கள் தங்கும் விடுதி
எனினும் கடன் வந்து விட்டதே என இல்லாமல் பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லையே என புலம்புவாராம். இதனால் நண்பர்களும் ஒரு ஆலோசனை வழங்கினர். உல்லாசமாக இருக்க வேண்டும், ஆனால் காசு செலவு செய்யக் கூடாது. அதற்கு தகுந்தபடி அவர்கள் கொடுத்த ஐடியாதான் இந்த பெண்கள் தங்கும் விடுதி.

நண்பர்கள் ஐடியா
இந்த விடுதிகளில் தங்கும் பெண்களை ரகசிய கேமரா மூலம் வீடியோவாக எடுத்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவிப்பது என்பதே அவர்கள் கொடுத்த திட்டம். அங்கு தங்கும் பெண்கள் வாடகையாக ஒரு தொகையை அளிப்பர். இதன் மூலம் பண கஷ்டமும் தீரும் என்பதே நண்பர்கள் கொடுத்த ஐடியா.

கைது
நண்பர்கள் ஆலோசனைக்கு கேற்ப சென்னை ஆதம்பாக்கத்தில் தில்லை நகரில் பெண்கள் விடுதியை தொடங்கினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு குளியல் அறை, படுக்கை அறை ஆகியவற்றில் ரகசிய கேமராவை பொருத்தியிருந்தார். இதை அங்கு தங்கியிருந்த பெண்கள் கண்டுபிடித்து போலீஸில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சஞ்சீவி கைது செய்யப்பட்டார்.
-
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications