50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதி பங்கீடு விவகாரம் ஒரு மிகப்பெரிய அரசியல் மர்மமாகவே நீடித்து வருகிறது.. தேர்தல் தேதி நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், இன்னமும் சீட் இழுபறி நீடிப்பது பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் வரை நிலவிய சூழலுக்கும், இப்போதைய கள யதார்த்தத்திற்கும் இடையே பெரும் இடைவெளி விழுந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..

Edappadi Palanisami aiadmk BJP Amit Shah Piyush Goyal Tamil Nadu Assembly Election 2026 TN Election Special 2026

ஆரம்பக்கட்டத்தில் பாஜக தரப்பில் சுமார் 50 தொகுதிகள் வரை கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.. இந்த 50 தொகுதிகளுக்குள் ஜி.கே.வாசன், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் மற்றும் பாரிவேந்தர் போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களையும் சேர்த்து பாஜகவே பிரித்துக் கொடுக்கும் என்ற ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது..

இது தொடர்பாக விவாதிக்கவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்று அமித்ஷாவை சந்தித்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.. ஆனால், அன்று 30 தொகுதிகள் வரை தரலாம் என நினைத்த எடப்பாடி பழனிசாமி, இப்போது தனது பிடியை மேலும் இறுக்கியுள்ளாராம்.

அமிர்தஷா - எடப்பாடி பழனிசாமி

காலமாற்றத்திற்கு ஏற்ப தற்போதைய நிலவரம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது.. அமித்ஷா உடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், சமீபத்தில் திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியின் பயணத்தின்போது இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட்டன..

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை ஹோட்டலில் வைத்து இருமுறை சந்தித்துப் பேசினார்.. காலை மற்றும் மாலை என நீண்ட நேரம் நடந்த இந்த ஆலோசனைகளில் பாஜக தனது பிடிவாதத்தைக் குறைக்கவில்லை போல தெரிகிறது.

பாஜக 41 தொகுதிகள்

இப்போது பாஜக 41 தொகுதிகளைக் கேட்க, எடப்பாடியோ 25 இடங்களுக்கு மேல் ஒரு சீட் கூட வழங்க முடியாது என மிகவும் கறாராக மறுத்துவிட்டதாக தெரிகிறது.. குறிப்பாக, அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கோவை மாவட்ட தொகுதிகளையும், தென் மாவட்டத்தின் முக்கிய இடங்களையும் பாஜக குறிவைப்பது எடப்பாடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிருப்தியின் வெளிப்பாடாகவே, பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமி விமான நிலையம் செல்லவில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.. பியூஷ் கோயல் தரப்பில், "பாஜக கேட்கும் தொகுதிகளை மட்டும் ஒதுக்கிவிடுங்கள், மற்ற கட்சிகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்" எனச் சொன்னதற்கு, "நாங்கள் ஒதுக்கும் தொகுதிகளை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்" என எடப்பாடி பதிலடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.. இதனால் கூட்டணிக்குள் ஒருவித இறுக்கமான சூழல் நிலவுகிறது.

தொகுதி பங்கீடு இழுபறி

அதிமுக - பாஜக இடையிலான இந்த இழுபறியால், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்ற தலைவர்கள் தங்களின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க முடியாமல் காத்திருக்கின்றனர்..

இந்த தொகுதிப் பங்கீடு இழுபறியில் உள்ளதால், மீண்டும் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவைச் சந்திக்கும் நிலைக்கு எடப்பாடி தள்ளப்படலாம் என தெரிகிறது.. 50-ல் தொடங்கி தற்போது 25-ல் வந்து நிற்கும் இந்த எண்களின் விளையாட்டு, இறுதியில் எங்கு போய் முடியும் என்பதுதான் தமிழக அரசியலின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+