சென்னையில் இன்று 5 மணி நேரம் மின்தடை.. உங்க ஏரியா இருக்கா? மின்வாரியத்தின் லிஸ்ட் இதோ
சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக இன்று (ஆகஸ்ட் 2, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் அதற்கேற்ப மின்சாதனங்களை பயன்படுத்தி செய்யும் வேலைகளை திட்டமிட்டு கொள்வது நல்லது.
பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் பணிக்காக மின்வாரியம் சார்பில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 02.08.2024 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கொரட்டூர், புது வண்ணாரபேட்டை, கோபாலபுரம் மற்றும் இராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கோபாலபுரம்: கவுடியா மட தெரு, தோமையப்பன் தெரு, அம்மையப்பன் லேன், கணபதி கானி முதல் தெரு, பொன்னுசாமி தெரு, லாயிட்ஸ் ரோடு ஒரு பகுதி, பெசன்ட் ரோடு, ராமசாமி தெரு, சதாசிவம் தெரு, பிவி கோவில் 1 முதல் 3 தெருக்கள், கணபதி காலனி 2வது தெரு, புதுப்பேட்டை கார்டன் நேரு மற்றும் லேன், டிகே சாலை, கண்ரான்ஸ்மித் ரோடு, ஜெய்ப்பூர் நகர், எஸ்பிஎஸ் 1,2 தெருக்களில் மின்தடை ஏற்படும்.
மேலும் அம்மையப்பன் தெரு, முத்து தெரு, சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, சண்முகம் தெரு, ரெபோரியல் தெரு, கோவர்த்தன் தெரு, தாண்டவராயன் தெரு, வடக்கு கோபாலபுரம், 1 மற்றும் 2வது தெருக்கள் இராயப்பேட்டை, இந்திரா கார்டன், பீட்டர்ஸ் ரோடு ஒரு பகுதி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, திருவிக ரோடு, புத்தி பேகம் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
தண்டையார்பேட்டை: புது வண்ணாரப்பேட்டை நார்த் டெர்மினல் ரோடு, டிஎச் ரோட்டின் ஒரு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசிய நகர், நம்மய்யா தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கேடசன் அலி தெரு, வீரராகவன் தெரு, இருசப்ப மேஸ்திரி தெரு, பூண்டி தங்கம்பாள் தெரு, ஏஇ கோவில் தெரு உள்ளிட்ட இடங்களிலும் ‛பவர்கட' ஏற்பட உள்ளது.
அதேபோல் ஆவூர் முத்தையா தெரு, காலடிப்பேட்டை, தியாகராயபுரம், பிபிடி ரோடு, புதிய காலனி, பி சதானநதபுரம், ஏ சதானந்தபுரம், சேஷாசல கிராமணி தெரு, மேட்டு தெரு, டிஎச் ரோடு, கனரா பேங்க் வரை, எம்ஜிஆர் நகர், கவரை தெரு, கிராமத்தெரு, வஊசி நகர் கிராஸ் ரோடு, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்பிடி குடியிருப்பு, ஏஇ கோவில் தெரு மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
கொரட்டூர்: அன்னை நகர், டிவிஎஸ் நகர், பள்ளத் தெரு, பத்மாவதி நகர், அன்பு நகர், ஏவிஎஸ் மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் சப்ளை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications