ஆதார் +பாஸ்போர்ட் +ரூபாய்! எல்லாத்தையும் மாற்றனும்! இந்தியா பெயரை மாற்றினால் என்ன நடக்கும் தெரியுமா
சென்னை: இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் அதன் பின் பல்வேறு முக்கியமான ஆவணங்கள் பலவற்றின் பெயரையும் மாற்ற வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்படும்.
இந்தியாவின் பெயர் பாரத குடியரசு என்று மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. நேற்றில் இருந்து இந்தியா முழுக்க இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டத்தை சீர்திருத்தி இந்தியா என்பதை நீக்கி வெறும் பாரத் என்பதை பயன்படுத்த முடிவு எடுக்கப்படலாம். இப்போது இந்தியா, அதாவது பாரத் என்று உள்ளது. இதை இந்தியா என்று மட்டும் மாற்ற பாஜக அரசு முடிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது.

மத்திய பாஜக அரசு இதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பாரத குடியரசுத்தலைவர் என குடியரசுத்தலைவர் மாளிகை அழைப்பிதழ் அளித்துள்ளதும் இந்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜி.20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அழைப்பிதழில் பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்ட தொடர் நடக்க உள்ளது. இந்த நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடரில் பாரத குடியரசு என மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 18 - 22 வரை இந்த சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று(செப்.6) நடைபெறுகிறது. இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை காரணமாக பின்வரும் பாதிப்புகள் ஏற்படலாம்.
▪️இது உங்கள் அனைத்து ஆவணங்களையும் நாணயங்களையும் செல்லாததாக்கும்.
▪️ அதாவது ஆதார் தொடங்கி இந்தியா என்ற பெயர் உள்ள ஆவணங்களான பாஸ்போர்ட் வரை எல்லாம் செல்லாததாகும்.
▪️ இந்த ஆவணங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
▪️அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை உங்களை வரிசையில் நிற்க வைக்கும். DEMONETISATION சமயத்தில் நீங்கள் செய்ததைப் போன்ற அலுவலகங்கள் முன் நிற்க வேண்டி இருக்கலாம்.
▪️இது கோடிக்கணக்கான வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கும்.
▪️இது 140 கோடி இந்தியர்களின் புதிய ஆவணங்களை மீண்டும் உருவாக்கும் நேரத்தை ஏற்படுத்தும். இதனால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாக்குவார்கள்.
▪️ ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களின் பெயர்கள் மாறும். இதனால் அங்கே உள்ள பழைய ஆவணங்களின் பெயர்கள் மாறும்.
▪️ பல கோப்புகள் மொத்தமாக செல்லாமல் ஆகும்.
▪️ சர்வதேச அரங்குகளில் மீண்டும் பாரத் என்ற பெயரை பிராண்ட் செய்ய வேண்டும். முதலீட்டு ரீதியாக இது பாதிப்பை ஏற்படுத்தும்.
▪️வெளிநாட்டு முதலீடுகள் வருவதில் முதல் சில மாதங்கள் பாதிப்புகள் ஏற்படலாம்.
▪️இது அரசு அலுவலகங்களில் ஊழலைச் அதிகரிக்கும். ஆவணங்களில் பெயர்களை மாற்ற வரும் மக்களிடம் லஞ்சம் வாங்க வாய்ப்புகள் உள்ளன.
▪️பாரத் என்ற பெயரை மாற்றும் பட்சத்தில் வெளிநாட்டில் படிக்கும் இந்திய பாஸ்போர்ட் கொண்டவர்கள் அதிகம் சிரமத்திற்கு உள்ளவர்கள். இதனால் தொடக்கத்தில் இந்தியா என்ற பெயர் சில காலம் அமலில் இருக்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகலாம்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications