வங்கி கணக்கில் ரூ.1000 முதல்.. ஆதார்.. மின் கட்டணம் வரை.. ஆகஸ்ட் மாதம் மாறப்போகும் முக்கிய விஷயங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவில் பல்வேறு விஷயங்கள் மாற உள்ளன. ஒவ்வொரு புதிய மாதம் பிறக்கும் போதும் பல விஷயங்கள் மாற்றம் அடையும்.. அதன்படி இந்த மாதமும் பல விஷயங்கள் மாற உள்ளன.

சிலிண்டர் விலை; இந்த மாதம் சிலிண்டர் விலையும் குறைக்கப்படலாம். ஏற்கனவே கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

tangedco eb aadhaar

எல்பிஜி விலையானது முக்கியமாக அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் இது உலகளாவிய கச்சா எரிபொருள் விலையின் அடிப்படையில் மாத அடிப்படையில் மாற்றத்திற்கு உட்பட்டது. கச்சா எண்ணெயின் விலை உயர்வால் தமிழகத்தில் எல்பிஜி விலை உயர்வு மற்றும் அதற்கு நேர்மாறாக உள்ளது. எல்பிஜி பாதுகாப்பான மற்றும் நிறமற்ற வாயுவாகும்.

எனவே அதன் பயன்பாடு உள்நாட்டு மற்றும் தொழில்துறை துறையில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. சமூகத்தின் குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு மானிய விலையில் இந்திய அரசாங்கம் தற்போது வீட்டு எல்பிஜி எரிவாயு சிலிண்டரை (14.2 கிலோ) வழங்குகிறது. மானியத் தொகை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். தற்போது, ​​இந்தியாவில் சமையல் எரிவாயு பெரும்பாலான மக்கள் எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த 4 மாதங்களுக்கு முன் ₹23.50 உயர்ந்து ₹1,960.50க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சிலிண்டர் விலை ரூ.1,937இல் இருந்து ரூ.1,960.50 காசுகளாக உயர்ந்தது. அதன்பின் தொடர்ச்சியாக 4 மாதங்களாக சிலிண்டர் விலை குறைந்தது. வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.31 குறைந்து ரூ.1809ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 4 மாதங்களில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.151 குறைந்துள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் கடந்த 4 மாதங்களுக்கு முன் ரூ. 918க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 4 மாதங்களில் 100 ரூபாய் அதில் குறைந்துள்ளது.

கேஸ் சிலிண்டர்: வீடுகளுக்கு இனி கேஸ் சிலிண்டர் வாங்கும் முறை மொத்தமாக மாற போகிறது. தற்போது உள்ளது போல அல்லாமல் புதிய முறைப்படி இனி கேஸ் விற்பனை நடக்க உள்ளது. அதன்படி திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்கள் விரைவில் க்யூஆர் குறியீடுகளுடன் வரும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர்களுக்கான QR குறியீடு, எரிவாயு சிலிண்டர்கள் விதிகள் (ஜிசிஆர்) சட்டத்தில்; இணைக்கப்பட்டுள்ளதாக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இறுதி அறிவிப்பு பெரும்பாலும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த மீட்டிங் ஒன்றில் இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி சிலிண்டர்களில் இனி க்யூ ஆர் கோடு இருக்கும்.

இந்த கோடை இனி ஸ்கேன் செய்தால் மட்டுமே சிலிண்டர் வாங்க முடியும். சிலிண்டர் திருட்டை தடுக்க இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதேபோல் வீட்டு சிலிண்டர்களை கடைகளில் பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. க்யூ ஆர் கோடு காரணமாக.. வீடுகளுக்கு இனி கேஸ் சிலிண்டர் வாங்கும் முறை மொத்தமாக மாற போகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் புதல்வன் திட்டம்: ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்; பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசு அங்கீகரித்ததாக இருத்தல் வேண்டும் பிற மாநிலங்களில் IIT, NIT, IISER போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் பயன் பெறலாம்.

தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பயன்பெறுவர். வருமான உச்ச வரம்பு உட்பட எந்தப் பாகுபாடும் இல்லை. 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை செயல்படுத்த மாநில அளவிலான குழு, மாநில அளவிலான மேற்பார்வையாளர் குழு அமைத்து அரசாணை வெளியீடு. 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்திற்காக விண்ணப்பிக்க பிரத்யேக தகவல் முகமை (Portal) உருவாக்கம் உயர்கல்வி பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக, மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்

தொலைதூரக்கல்வி மற்றும் அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஊக்கத்தொகைப் பெற இயலாது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயின்று ஐடிஐ படிக்கும் மாணவர்களும் பயன்பெறலாம்.

எச்டிஎப்சி: CRED, Cheq, MobiKwik, Freecharge மற்றும் பிற சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வாடகை செலுத்துவதற்கு பரிவர்த்தனை தொகையில் எச்டிஎப்சி சார்பாக 1% வசூலிக்கப்படும், இது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.3,000 வரை அதிகபட்சம் வசூலிக்கப்படும்.. ஒரு பரிவர்த்தனைக்கு 15,000 ரூபாய்க்கு கீழ் உள்ள பரிவர்த்தனைகளுக்கு, எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. இருப்பினும், ரூ. 15,000க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகள் மொத்தத் தொகையின் மீது 1% கட்டணம் விதிக்கப்படும், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 3,000 வரை அதிகபட்சம் வசூலிக்கப்படும்.

மின் கட்டணம்: தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த 2011-12 ஆம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, கடந்த 10 ஆண்டுகளில், ரூ.94,312 கோடி மேலும் அதிகரித்து. 31.03.2021 வரை ரூ.1,13,266 கோடியாக உயர்ந்தது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை. 2021-22 ஆம் ஆண்டிலிருந்து 100% முழுமையாக அரசே ஏற்று கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல, முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால். மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில். 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை. இந்த மாதம் முதல் புதிய முறையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

ரேஷன் கார்டு; தமிழ்நாடு முழுக்க புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. ஆகஸ்ட் மாதம் இந்த அட்டைகள் வழங்கப்படும்.

புதிதாக 2 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இன்று முதல் தினமும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.

ஆதார் அட்டை: ஆதார் விவரங்களை திருத்த கால அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. 30 நாட்களில் இதற்கான இறுதி டெட் லைன் நிறைவு பெறுகிறது.

தனிப்பட்ட கணக்குகளை பயன்படுத்தி அடுத்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி வரை விவரங்களைத் திருத்தலாம். முன்னதாக கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் இந்த மாதம்தான் அதற்கான கடைசி வாய்ப்பு . முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பர் 14 வரை இலவசமாகச் செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் இந்த அவகாசம் மார்ச் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இதற்கான அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி உள்ளது. ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+