மக்களே அலர்ட்! அடையாறு, பெசன்ட் நகர் என சென்னையில் பல முக்கிய பகுதிகளில் இன்று மதியம் வரை மின் தடை
சென்னை: வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றைய தினம் அடையாறு, பெசன்ட் நகர், தண்டையார்பேட்டை, நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றைய தினம் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாகக் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாமர் துண்டிக்கப்படும். அதன்படி சென்னையில் இன்று அடையாறு, பெசன்ட் நகர், தண்டையார்பேட்டை, நெற்குன்றம் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்.

பராமரிப்பு பணிகளுக்காகக் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் ஒரு வேலை முன்கூட்டியே முடிந்தால் அதற்கேற்ப மின்சாரம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மின் வெட்டு: இன்றைய தினம் அடையாறு பகுதியில் பெசன்ட் நகர், மாளவியா அவென்யூ, சாஸ்திரி நகர் 1 முதல் 4வது தெரு, சிவகாமிபுரம், கங்கை அம்மன் கோயில் தெரு, எல்ஐசி காலனி, சுப்ரமணியம் காலனி 1 முதல் 3வது தெரு, எம்.ஜி.ரோடு, ஆர்.கே.நகர் பிரதான சாலை, 1 முதல் 3வது குறுக்குத் தெரு, ஆர்.கே.நகர், மருந்தீஸ்வர் நகர், சுன்னம்பு கால்வாய், காமராஜர் நகர், ஆர்பிஐ காலனி, 1வது பிரதான சாலை சாஸ்திரி நகர், 6வது குறுக்குத் தெரு சாஸ்திரி நகர், 1வது குறுக்குத் தெரு சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
மேலும், அடையாறு சங்கம் காலனி, பாலவாக்கம், பிஆர்எஸ்.நகர், பாரதிதாசன் தெரு, அம்பேத்கர் நகர், பள்ளித் தெரு, வைத்தியர் தெரு, மா.பொ.சி தெரு, சுப்புராயன் தெரு, மசூதி தெரு, அன்பழகன் தெரு, அம்பேத்கார் தெரு , நாராயணசாமி தெரு, பாரதியார் தெரு, காயிட் இ-மில்லத் தெரு, விஓசி தெரு, சுந்தரமூர்த்தி தெரு, பஞ்சாயத்து தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, பூங்கா. தெரு, அமரநந்தா வில்லா, பாஸ் அவென்யூ, ஜெயசங்கர் நகர் முழுவதும், வைகோ சாலை பகுதிகளிலும் மின்வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் இருக்காது: தண்டையார்பேட்டையில் மேலூர், மீஞ்சூர் டவுன், டி.எச்.ரோடு, மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சிறுவாக்கம், சூரியா நகர், பிடிஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம், அரியன்வயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம். . வழுதிகைமேடு, கரையன்மேடு பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நெற்குன்றம் பகுதியில் ரமணியம் அடுக்குமாடிக் குடியிருப்புகள், எலும்பு மில், எல்எஸ் மருத்துவமனை, பெருமாள் கோயில் தெரு, ஏவிகே தெரு, அருள்மிகு மீனாட்சி நகர், அழகம்மாள் நகர், பால்வாடி தெரு, நேதாஜி அவென்யூ, சக்தி நகர், திருவள்ளூர் தெரு, கருணீகர் தெரு, மக்கள் குடியிருப்பு, பிஎச் சாலை பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications