சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்போது எங்கே நடைபெறும்? சீறி பாய தயாராகும் காளைகள்.. களைக்கட்டும் பொங்கல்

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நடைபெற உள்ளன. இதனிடையே வரும் நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்போது எங்கு நடைபெறுகிறது என்பதைப் பார்க்கலாம்.

நாளை ஜன.15ஆம் தேதி முதல் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பொங்கல் கொண்டாடப்பட உள்ளதால், சென்னை உட்பட பெருநகரங்களில் வசிப்போர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

முக்கியத்துவம் பெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை? தொடங்கி வைப்பது யார்? முக்கியத்துவம் பெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை? தொடங்கி வைப்பது யார்?

பொங்கல்

பொங்கல்

பொங்கல் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை ஜல்லிக்கட்டு வீரர்கள் பாய்ந்து சென்று அடங்குவார்கள். தமிழர்கள் காலசாராத்திலேயே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்துள்ளது. இடையே சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட போதும், பெருந்திரளாகக் களத்தில் இறங்கிய தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் நடைபெறக் காரணமாக அமைந்தனர்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு


தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அதேபோல வட தமிழ்நாடு பகுதிகளில் மஞ்சுவிரட்டு நடத்தப்படும். இப்படிப் பொங்கல் காலத்தில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். அங்கு தச்சங்குறிச்சியில் தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அங்கு முதலில் ஜன.1ஆம் தேதி தான் முதலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பாதுகாப்பு காரணங்களால் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜனவரி 2இல் போட்டிகள் நடந்தன.

 முதல் ஜல்லிக்கட்டு

முதல் ஜல்லிக்கட்டு

இந்தாண்டு ஜன. 2ஆம் தேதி நடத்த அனுமதி கிடைக்காத நிலையில், முதலில் ஜனவரி 6இல் ஜல்லிக்கட்டு நடத்தத் திட்டமிடப்பட்டது. இருப்பினும், அப்போது விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததால் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ஜன. 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. வரும் நாட்களில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் எந்த ஊரில் எப்போது நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

 எப்போது நடைபெறும்

எப்போது நடைபெறும்

பொங்கல் தினத்தன்று நாளை வரும் 15ஆம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது,. அவனியாபுர ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குச் சமீபத்தில் தான் . அதைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல் நாளான 16ஆம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் ஜன.17ஆம் தேதி நடைபெற உள்ளது.

காளைகள்

காளைகள்

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் இந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க சுமார் 10 ஆயிரம் காளைகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். அனைவரும் பதிவு செய்திருந்தாலும் கூட இவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டில் களமிறங்க அனுமதி கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும். டோக்கன் இருந்தால் மட்டுமே அவர்களால் போட்டிகளில் களமிறங்க முடியும்.

 சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுகள் துன்புறுத்தப்படுவதில்லை என்று வாதிட்ட தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், தமிழக கலாச்சாரத்தில் ஜல்லிக்கட்டு இணைந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணைக்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Jallikattu events to be conducts acorss the state: Jallikattu to be conducted due to Pongal 2023
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X