கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி முதல் கருணைத் தொகை வரை! அதிமுக கொடுத்த 17 வாக்குறுதிகள் யாவை?
Subscribe to Oneindia Tamil
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி முதல் கருணைத் தொகை ரூ 10000 வரை, வரும் சட்டசபை தேர்தலுக்கு அதிமுக இதுவரை வழங்கிய வாக்குறுதிகளை பார்க்கலாம்.
அதிமுக தேர்தல் வாக்குறுதி குறித்த அறிவிப்புகள், முதல் கட்டமாக கடந்த ஜனவரி 17ஆம் தேதியும், 2ஆம் கட்டமாக பிப்ரவரி 4- ஆம் தேதியும், 3-ஆம் கட்டமாக இன்றைய தினம் (பிப்.24) வெளியானது.

முதல் கட்ட அறிக்கை
- மகளிர் நலன்: சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்க, 'குலவிளக்கு' திட்டம் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும். குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் இத்தொகை செலுத்தப்படும்.
- ஆண்களுக்கும் இலவச பேருந்துப் பயணம்: நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கும் இலவச பேருந்துபயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
- அம்மா இல்லம்' திட்டம்: 'அம்மா இல்லம்' திட்டம் மூலம் கிராமப்புறங்களில் குடியிருக்க சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி இலவசமாக வழங்கப்படும். பட்டியலின மக்கள் ஒரே குடும்பத்தில் வசிக்கும் நிலையில், அவர்களது மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்லும்போது, அரசே இடம் வாங்கி, கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
- 150 நாள் வேலை: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
அம்மா இருசக்கர வாகனம்: 5 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 'அம்மா இருசக்கர வாகனங்கள்' வழங்கப்படும்.
இரண்டாம் கட்ட அறிக்கை
- முதியோருக்கு ஓய்வூதியம் ரூ 2 ஆயிரம் வழங்கப்படும்.
- சிறுபான்மையினர் பெற்ற கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சம் வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் படுகாயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும்.
- ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
- இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
- மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
மூன்றாவது கட்ட அறிக்கை
- திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள விலை உயர்வு, மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை ஈடுகட்ட அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 10000 ஒரு முறை வழங்கப்படும்.
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டதாரிகளுக்கு மாதம் ரூ 2000. பிளஸ் 2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ 1000.
- பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ 1000 வழங்கப்படும்.
- விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக இலவச மின்சாரம் வழங்கப்படும்.
- மீன் பிடி தடைக்கால நிவாரணம் ரூ 8 ஆயிரத்தில் இருந்து ரூ 12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- நகர்ப்புற நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் ரத்து செய்யப்படும். இவ்வாறு 17 வாக்குறுதிகளை இதுவரை அதிமுக கொடுத்துள்ளது.
More From
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications