ஜனவரி 1 முதல் .. உங்கள் பணம் மற்றும் தினசரி வாழ்க்கையை புரட்டி போட போகும் 9 மாற்றங்கள்
சென்னை: 2025-ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இன்னும் ஏழு நாளில் புத்தாண்டு பிறக்கிறது. ஜனவரி 1, 2026 முதல் வங்கிச் சேவைகள், சம்பளம், விவசாயிகள், சமூக ஊடக பயன்பாடு மற்றும் அன்றாடச் செலவுகளை புரட்டி போடும் வகையில் பல விதிமுறைகளும் கொள்கை மாற்றங்களும் அமலுக்கு வருகிறது. அந்த முக்கிய மாற்றங்களின் எளிமையான விளக்கங்களை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
1. ஸ்பீடாகும் கிரெடிட் ஸ்கோர் அப்டேட்: இனி சிபில் போன்ற கிரெடிட் பீரோக்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்குப் பதிலாக வாரந்தோறும் அப்டேட் செய்ய போகின்றன. 15 நாளைக்கு ஒரு முறை மாற்றிய காரணத்தால் உங்களின் கடன் அப்டேட் வங்கிகளுக்கு தெரியாமல் இருந்தது. இனி கடன் தகுதி மற்றும் கடன் வரலாறு குறித்த தகவல்கள் உடனுக்குடன் வங்கிகளுக்கு தெரிந்துவிடும்.

2. மலிவான கடன்கள் மற்றும் மாற்றப்பட்ட எப்டி வட்டி விகிதங்கள்: பாரத ஸ்டேட் வங்கி , பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி போன்றவை கடன் வட்டி விகிதங்களை கணிசமாக குறைத்துள்ளன. நிலையான வைப்புத்தொகைக்கான புதிய வட்டி விகிதங்களும் ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. வட்டி குறைவு என்பதால் கடன் வாங்குவோருக்கு உண்மையில் பலன் தரும். அதேநேரம் பணம் சேமிப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
3. பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: ஜனவரி 1 முதல் உங்களுடைய வங்கி மற்றும் அரசு சேவைகளுக்கு பான்- ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. இணைக்கப்படாவிட்டால் சேவைகள் மறுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதுவரை பான் கார்டு தராமல் வங்கிகளில் கிராமப்புறங்களில் கணக்கு வைத்துள்ளவர்கள் பான் கார்டு எடுத்து அதனை வங்கி கணக்குடன் இணைத்துவிடுங்கள். இணைக்காவிட்டால் ஒரு நாளைக்கு 49000க்கு மேல் பணபரிமாற்றம் செய்ய முடியாது.
4. யுபிஐ, சிம் கார்டு மற்றும் மெசேஜிங் விதிகளில் கெடுபிடி: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகளைக் குறைக்க யுபிஐ மற்றும் வங்கி விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் , டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகள் மூலம் நடக்கும் மோசடிகளைத் தடுக்க சிம் சரிபார்ப்பு விதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
5. குழந்தைகளுக்கு சமூக ஊடகக் கட்டுப்பாடுகள் ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளைப் பின்பற்றி, இந்தியாவில் 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு வயது சரிபார்ப்பு மற்றும் பெற்றோரின் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கடுமையான சமூக ஊடக விதிகளைக் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
6. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்: டெல்லி மற்றும் நொய்டா போன்ற நகரங்களில் மாசுவைக் குறைக்க பெட்ரோல் மற்றும் டீசல் வணிக வாகனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது டெலிவரி சேவைகளைப் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
7. அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு : 8-வது ஊதியக் குழுஜனவரி 1, 2026 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படியும் உயர வாய்ப்புள்ளதால், அரசு ஊழியர்களுக்கு நிச்சயம் வருமான உயர்வைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8. விவசாயிகளுக்கான புதிய விதிகள்: உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பிஎம்-கிசான் பலன்களைப் பெற விவசாயிகளுக்கு 'தனித்துவமான விவசாயி ஐடி' தேவைப்படும். மேலும், பிஎம் கிசான் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காட்டு விலங்குகளால் பயிர் சேதமடைந்தால், 72 மணி நேரத்திற்குள் புகாரளித்தால் இனி காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
9. எரிபொருள், கேஸ் விலை மற்றும் ITR மாற்றங்கள் : ஜனவரி 1 அன்று எல்பிஜி , வணிக ரீதியான காஸ் மற்றும் ஏடிஎஃப் விலைகள் மாற்றியமைக்கப்படும். எனவே சிலிண்டர் விலை மாற்றம் உங்களுக்கு சாதமாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்பதை பொறுந்திருந்து பார்க்க வேண்டும். ஜனவரி ஒன்று முதல் வருமான வரித் தாக்கல் செய்வதை எளிதாக்கும் வகையில் புதிய 'முன்பே நிரப்பப்பட்ட' ஐடிஆர் படிவம் எதிர்பார்க்கப்படுகிறது. இது தாக்கல் செய்வதை எளிதாக்கினாலும், ஆய்வுகள் தீவிரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications