சமையல் எண்ணெய் இனி பாக்கெட்களில் மட்டுமே... ஜூன் 1-ம் தேதி முதல் சில்லறையாக வாங்க முடியாது
சென்னை: சமையல் எண்ணெயை ஜூன் 1-ம் தேதி முதல் பாக்கெட்களில் மட்டுமே விற்க வேண்டும் என்றும், சில்லறையாக விற்க கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமையல் எண்ணெயில் கலப்படம் தொடர்பான புகார்கள் உணவு பாதுகாப்புத் துறைக்கு குவிந்ததால் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது தமிழக அரசு. தற்போது கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் உள்ள ஆயில் ஸ்டோர்களில் சமையல் எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள் தேவைப்படுவோருக்கு சில்லறையாக விற்கபடுகின்றன.

ஒரு லிட்டர் எண்ணெய் வாங்க முடியாதோர் தங்கள் பாத்திரத்தை எடுத்து சென்று 200 மி.லி., 300 மி.லி. என்று தங்கள் வசதிக்கேற்றவாறு ஆயில் ஸ்டோர்களிலும், மளிகைக்கடைகளிலும் எண்ணெய் வாங்கி செல்வார்கள். இப்போது இந்த நடைமுறை ஜூன் 1-ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இதற்கு எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு உத்தரவுப்படி இனி சமையல் எண்ணெய் வகைகளை பாக்கெட்களில் அடைத்து, சீலிட்டு விற்பனை செய்ய வேண்டும். இதன்மூலம் கலப்படம் மற்றும் போலி தயாரிப்புகளை ஒழிக்க முடியும் என்பது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை சிறு வணிகர்களை பாதிக்கும் என்றும், அனைவராலும் பேக்கேஜிங் உரிமம் வாங்க முடியாது எனவும் எண்ணெய் விற்பனையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பழைய முறைப்படி மீண்டும் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில் தமிழகத்தில் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், அதனை அடியோடு இந்த உத்தரவு பாதிக்கச்செய்யும் என்பதும் அவர்களின் வாதமாக உள்ளது. இதனிடையே பொதுமக்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், எண்ணெய் பாக்கெட்களை இனி 250 மி.லி. , 500 மி.லி. என்ற அளவில் கூட பேக் செய்து வாங்குவோரின் வசதிக்கேற்ப விற்பனை செய்ய எண்ணெய் உற்பத்தியாளர் முன்வர வேண்டும் என உணவுப் பாதுகாப்பு துறை கேட்டுக்கொண்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications