இந்த ஏரியாதான் ரொம்ப மோசம்.. சென்னை புறநகரில் சர்ரென சரிந்த நிலத்தடி நீர்மட்டம்! அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புழல், மணலி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள கிணறுகளில் ஆகஸ்ட் மாத மழைக்குப் பிறகும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.

ஆனால், அசோக் நகர் மற்றும் வால் டாக்ஸ் ரோடு போன்ற சென்னையின் முக்கிய நகரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சிறப்பாக உள்ளது. மழை பெரிய அளவில் இல்லை. நிலத்தடி நீர் சேமிப்பு குறைய இதுவே காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Chennai

சென்னையில் புதிதாக இணைக்கப்பட்ட பல பகுதிகள் போர்வெல் கிணறுகளையே நம்பியிருப்பதால், நீர் விநியோகத்தை சரிசெய்வதில் குடியிருப்பாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் செப்டம்பர் மாதத்திற்கான இயல்பை விட அதிக மழைப்பொழிவு குறித்த கணிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தை மீண்டும் நிரப்ப ஒரு நம்பிக்கையை அளிக்கிறது.

சென்னை நிலத்தடி நீர்

அதேபோல் சென்னையில் உள்ள 75% வீடுகளில் உள்ள நிலத்தடி நீர் கழிவு நீர் கலந்த நீர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள நிலத்தடி நீர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை உண்டாக்கும் பாக்டீரியாவான ஈ கோலியால் மாசுபட்டுள்ளது என சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

நீர் சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்தி.. தண்ணீர் குடிக்கும் குடும்பங்களும் இதில் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது வீட்டில் ஆர்ஓ மூலம் சுத்திகரித்து தண்ணீர் பயன்படுத்தும் மக்களும் கூட இதில் இருந்து தப்பிக்க முடியாது என்று சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. People's Water Data initiative எனப்படும் ஐஐடியின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பழைய தண்ணீர் குழாய்கள், அசுத்தமான தொட்டிகள் அல்லது தண்ணீர் கொள்கலன்கள் சென்னையில் மோசமாக உள்ளன.

சென்னை பாக்டீரியா

இவை தான் நோயை உண்டாக்கும் பாக்டீரியாவின் ஆதாரமாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் மொத்தம் 752 வீடுகளில் இதற்காக சோதனை செய்யப்பட்டது. இந்த வீடுகளில் உள்ள குழாய்கள், போர்வெல்கள் மற்றும் பிற இடங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டது.

இங்கே இருந்த குடிநீர் மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் சேகரித்தனர். ஈ கோலையானது இதில் கலந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மலம் மூலம் மாசுபட்ட நீர் நிலத்தடி நீரில் கலப்பதன் மூலம் மூலம் கோலையானது உணவு மற்றும் குடிக்கும் தண்ணீருக்குள் செல்கிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சென்னை குடிநீர்

டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும் ஐஐடி மெட்ராஸின் நீர் தரத் திட்டத்தின் பாட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுசான் ககன் இதை பற்றி கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். அதன்படி தண்ணீர் சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துபவர்கள் கூட இதில் இருந்து தப்பிக்க முடியாது. அவர்களும் கூட பாதுகாப்பான மற்றும் சுத்தமான தண்ணீரைக் குடிப்பதில்லை.

பாதிக்கப்பட்ட 75% குடும்பங்களில் குழந்தைகள் உள்ளனர். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை உண்டாக்கும் பாக்டீரியாவான ஈ கோலியால் மாசுபட்ட நீரைத்தான் இவர்கள் குடித்து வருகின்றனர். மக்கள் இதை பற்றி அறியாமல் குடித்துக்கொண்டு இருக்கின்றனர். எதை பற்றியும் தெரியாமல் தண்ணீர் சுத்தமாக உள்ளது என்று நினைத்து குடித்துக்கொண்டு இருக்கின்றனர். பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்ய அதிக விழிப்புணர்வு தேவை. ஆனால் அது மக்களிடம் இல்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீர் சுத்திகரிப்பு இன்னும் அதிகம் மேற்கொள்ளப்பட வேண்டும், இதற்காக உலக சுகாதார மையத்தின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தண்ணீர் கொள்கலன்களை காற்று புகாத, சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். இவற்றை நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். கழிவு நீர் குழாய் உடையாமல் பார்க்க வேண்டும். சென்னை மாநகராட்சி அடிக்கடி கழிவு நீர் குழாய்களை ஆய்வு செய்ய வேண்டும். நிலத்தடி நீருடன் கழிவு நீர் குழாய் கலக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+