"மங்கி".. போதையில் மேட்ச் ஆட வந்து மோதல்! மீன் பிடிக்க கிரிக்கெட்டை விட்ட சைமண்ட்ஸ்! பகீர் பக்கங்கள்
சென்னை: விபத்தில் பலியான ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கிரிக்கெட் உலகில் இருந்த வரை பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
Recommended Video
ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் பலியானார். டவுன்ஸ்வில் என்ற நகரத்தில் காரில் செல்லும் போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் சிக்கினார். உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு 46 வயதே ஆவது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கிரிக்கெட் உலகில் இருந்த வரை பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் வீரராக இருந்தாலும், இவர் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். இதன் காரணமாகவே கிரிக்கெட் மீது கவனம் செலுத்த முடியாமல் தன்னுடைய பிரைம் டைமில் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 2007 இவர் இருந்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆடியது.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கிரிக்கெட் உலகில் இருந்த வரை பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் வீரராக இருந்தாலும், இவர் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். இதன் காரணமாகவே கிரிக்கெட் மீது கவனம் செலுத்த முடியாமல் தன்னுடைய பிரைம் டைமில் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 2007 இவர் இருந்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆடியது.

மங்கி கேட்
அப்போது இரன்டு அணிகளும் வலுவாக இருந்தது. இந்த நிலையில் போட்டி ஒன்றில் ஹர்பஜன் சிங்கிடம் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் வம்பிழுத்தார். ஆஸ்திரேலியாவிற்கு உள்ள அதே ஸ்லெட்ஜிங் குணத்தை வெளிப்படுத்த கோபக்கார சிங்.. மங்கி என்று அவரை திட்டியதாக கூறப்பட்டது. இரண்டு பேருக்கும் இடையில் இதனால் கைகலப்பு ஏற்பட அதை சச்சினும், ரிக்கி பாண்டிங்கும்தான் சரி செய்தனர். அதன்பின் நடந்த விசாரணை பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹர்பஜன் விமர்சனம்
ஹர்பஜன் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இதையடுத்து விசாரணையில் ஹர்பஜன் சிங்.. நான் மங்கி என்று சொல்லவில்லை. தெரி மா கி என்று ஹிந்தியில் திட்டினேன். அது மங்கி அல்ல என்று கூறினார். பின்னர் விசாரணையில் ஹர்பஜன் சிங் மீது பெரிதாக எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. பிசிசிஐ தனது பவரை பயன்படுத்தி இந்த பிரச்னையை தீர்த்தது.

சர்ச்சசை மேல் சர்ச்சை
இந்த சம்பவத்திற்கு பின்பே ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பார்ம் இழந்தார். அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் மீது இதனால் கோபத்தில் இருந்ததாக கூறப்பட்டது. தன்னுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் நிற்கவில்லை. தனக்கான ஆதரவை அவர்கள் கொடுக்கவில்லை என்று ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் புலம்பியதாக கூறப்பட்டது.

குடி பழக்கம்
இது ஒரு பக்கம் இருக்க இவருக்கு கடுமையான குடிப்பழக்கமும் இருந்தது. 2005ல் கிரிக்கெட் தொடர் ஒன்றில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இவர் குடி பழக்கம் காரணமாக சர்ச்சையில் சிக்கினார். மேட்சிக்கு முதல்நாள் மொத்தமாக குடித்த மட்டையானர். மறுநாள் மேட்ச் நாளில் போதை தெளியாமல் கிரிக்கெட் ஆட முயன்றார். ஆனால் இவர் அணியில் சேர்க்கப்படவில்லை.

என்ன நடந்தது?
அதோடு விதி மீறலால் இரண்டு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டு இவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அதன்பின்தான் 2007ல் மங்கி சர்ச்சை வந்தது. இது போக 2008ல் வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு முன்பாக அணியின் முக்கியமான மீட்டிங்கில் இவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் அந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இந்த மீட்டிங்கில் அவர் கலந்து கொள்ளாமல் மீன் பிடிக்க சென்றுவிட்டார். இதனால் அதன்பின் பெரிதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் இவரை கண்டுகொள்ளவில்லை.

விதி மீறல்
அதேபோல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் ஒப்பந்தப்படி இவர் பொது இடங்களில் குடிக்க கூடாது. ஆனால் இவர் பொது இடங்களில் பல முறை குடித்து மாட்டினார். இதனால் இவருடனான ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் நீக்கியது. குடி பழக்கத்திற்கு அடிமையானர் சைமண்ட்ஸ்தான் தற்போது கார் விபத்தில் சிக்கி இருக்கிறார். இதனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாரா என்ற சோதனை செய்யப்பட்டு வருகிறது. இவரின் உடலில் மது இருந்ததா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications