Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mr. Clean ஜெயம் ரவி டூ நயன்தாரா அடிதடி வரை..! 2024 டாப் 5 கோலிவுட் சர்ச்சைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 ஆம் ஆண்டு விரைவில் விடைபெற இருக்கின்ற நிலையில், தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு நடந்த டாப் 5 சர்ச்சைகளைப் பற்றிப் பார்ப்போம்.

கோலிவுட் சினிமாவில் எந்தக் காலத்திலும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இருந்தது இல்லை. அப்படிப் பார்த்தால் 2024 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் 15 நாட்கள்தான் இருக்கின்றன. பிறக்கப் போகும் 2025 புதிய வருடம் பலருக்கும் நல்லதாக அமைய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

nayanthara a r rahman

புதிய ஆண்டு தொடக்கத்தை பற்றிய எதிர்ப்பு நிலவுவதைப் போலவே கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பதும் முக்கியமானதாக இருக்கிறது. நாம் பை பை சொல்லி அனுப்பப் போகிற 2024இல் தமிழ் சினிமாவில் நடந்த முக்கியமான சர்ச்சைகள் என்ன? ஒரு சின்ன ரீவைண்ட் ஸ்டோரி.

நம்பர் 1: இந்த ஆண்டு அதிகம் சர்ச்சையில் சிக்கியவர் ஜெயம் ரவிதான். அவர் நடிகராக அறிமுகமான காலத்திலிருந்து அவரைப் பற்றி ஒரு கிசுகிசு கூட சினிமா வட்டாரத்தில் அடிபட்டதே இல்லை. அவர் மிஸ்டர் க்ளீன் இமேஜ் உடன் வலம் வந்தார். ஆனால், இந்த ஆண்டு அந்தப் பெயரை அவரது திருமண வாழ்க்கை பிரேக் அப் உடைத்து எரிந்துவிட்டது. இந்த ஆண்டின் தொடக்க முதலே கிசுகிசுவாக வலம் வந்த அவரது பிரேக் அப் செய்தியை அவர் பெரிய அளவில் கண்டு கொள்ளவே இல்லை. கடந்த செப்டம்பர் மாதம்தான் அவர் ஊர் வாயை மூடும் விதமாகத் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் அவருக்கு காதல் இருப்பதாக ஒரு புதிய சர்ச்சை கிளம்பியது. அதை மறுத்த ஜெயம் ரவி, 'யாரையும் தன் வாழ்க்கையுடன் இணைத்துப் பேச வேண்டாம். கெனிஷா உடன் தான் ஒரு ஹீலிங் மருத்துவமனை ஆரம்பிக்க இருக்கிறேன்' என விவகாரத்தை முடித்து வைத்தார்.

நம்பர் 2: பள்ளிக் காலம் முதல் காதலித்து வந்த சைந்தவியை 2013 ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். இந்த ஜோடி மிக அமைதியாகப் பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக கடந்த மே மாதம் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக பிரகாஷ் அறிவித்தார்.

nayanthara a r rahman

அதைப் பற்றி பலரும் பல ஊகங்களை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வந்தனர். இதனிடையே அதற்கு விளக்கம் அளித்த ஜி.வி.பிரகாஷ், 'புரிதல் இல்லாமலும் போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பொதுவெளியில் விவாதிப்பது துரதிருஷ்டமானது' என்று குறிப்பிட்டிருந்தார். இவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியிலிருந்து வந்தது. சமீபத்தில் தனது மகளை பிரகாஷ் சந்தித்த நிகழ்வு பலரது பாராட்டைப் பெற்றிருந்தது.

நம்பர் 3: உலகில் இருக்கும் யாரைக் கேட்டாலும் அமைதி புயல் எனப் பெயர் எடுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்வில் இந்த 2024இல் மிகப் பெரிய புயல் வீசியது. அவரது மனைவி ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அறிவித்தார். அந்தச் செய்தியை முதலில் யாரும் நம்பவே இல்லை. ஆனால், பிறகு சாஹிரா பானுவின் வழக்கறிஞர் உறுதி செய்தார்.

இந்தச் செய்தி வெளியான அடுத்த நாளே ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றி வரும் மோகினி டே விவாகரத்தை அறிவித்தார். அதனுடன் ரஹ்மானை முடிச்சுப் போட்டு சிலர் பேசினர். அதற்கு இசைப் புயல் மகன் மறுப்பு தெரிவித்தார். பின்னர் சாஹிரா, தன் கணவர் நல்லவர் என்றும் தான் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிக்கை விட்டார். பின் ரஹ்மான் அவதூறு செய்திகளை அகற்றச் சொல்லி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

நம்பர் 4: இந்த வருடத்தின் அதிரடி சர்ச்சைக்கு சரியான தீனியாக அமைந்த திரைப்படம் சூர்யாவின் 'கங்குவா'. அந்தப் படம் வெளியாவதற்கு முன்பு அதைப் பற்றிய பில்ட் அப் அதிகமாக இருந்தன. சூர்யாகூட, 'இந்தப் படத்தை அனைவரும் வாயைப் பிளந்து பார்ப்பார்கள்' என்று பேசி இருந்தார். அதுவே படத்திற்கு எதிராக மாறியது. யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் சூர்யா படத்திற்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். அதைக் கண்டு ஜோதிகா தன் பங்குக்கு ஒரு அறிக்கை விட்டார். அதுவும் எதிர்ப்புகளை வாரிக் குவித்தது. பின்னர் யூடியூப் சேனல்கள் திரையரங்கம் முன் மக்கள் பேட்டி எடுத்து வெளியிடுவதை தடை போடும் அளவுக்கு திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசி இருந்தார். இந்த விவகாரம் 2024 ஹைலைட் சர்ச்சை பட்டியலில் இடம்பிடித்தது.

nayanthara a r rahman

நம்பர் 5: இந்த ஆண்டு இறுதியில் நடந்த நயன்தாரா, தனுஷ் ஆகியோ இடையே நடந்தது யுத்தம்தான் தமிழ் சினிமாவில் நடந்த உச்சகட்ட சர்ச்சை. தனது திருமணம் தொடர்பான டாக்குமெண்ட்ரியில் 'நானும் ரவுடிதான்' படத்தின் சிறிய காட்சிக்கு 10 கோடி நஷ்ட ஈடுகொடுக்க வேண்டும் என தனுஷ் தயாரிப்பு நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.

அதை வெளியிட்டு அதற்கு எதிராக அறிக்கை விட்ட நயன்தாரா, தனுஷ் மீது தனிப்பட்ட அளவில் தாக்குதல் நடத்தி இருந்தார். தான் தனியாக வந்து சினிமாவில் யாருடைய துணையும் இல்லாமல் வெற்றி பெற்றதாகவும் தனுஷை போல அப்பா, அண்ணன் உதவியைக் கொண்டு மேலே வரவில்லை என்றும் பேசி இருந்தார்.

இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானது. நீதிமன்றம் வரை இந்த இருவரையும் அழைத்துச் சென்றது. வழக்கு இப்போது சென்னை உயர்நீதி மன்ற விசாரணையில் உள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டின் ஹைலைட் நயன்தாரா. பல ஆண்டுகளாக ஊடகங்களின் பக்கம் தலை வைக்காமலிருந்து வந்த அவர் தனுஷுக்கு எதிராக இவ்வளவு கொந்தளிப்பிலிருந்துள்ளார் என்பது வெளிப்பட்டது. அதேபோல் இவரது கணவர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்குச் சொந்தமான உணவகத்தை விலை பேசியதாக ஒரு செய்தி வெளியானது. நெட்டிசன்கள் அவரை குறி வைத்து தாக்கினர். அவர் இந்தச் செய்தி உண்மை அல்ல என்று இப்போது மறுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+