ரஜினிகாந்த் முதல் அண்ணாமலை வரை.. பரபரப்பை தீயாய் பற்ற வைத்த சீமானின் பாஜக ஆதரவு சந்திப்புகள்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவை மிக கடுமையாக எதிர்ப்பதாக பொதுமேடைகளில் அறிவித்து பேசி வந்தாலும் பாஜக ஆதரவாளர்களான ரஜினிகாந்த், செங்கோட்டையன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோருடனான சந்திப்புகள் பெரும் விவாதப் பொருளாகி இருக்கின்றன.
தந்தை பெரியாரின் பேரன் என மேடைகளில் பேசி அடையாளம் பெற்ற சீமான், பெரியார், தமிழ்ச் சமூகத்தை சீரழித்தவர் என்கிற அதி உச்ச விமர்சனத்தை பேசுகிற அளவுக்கு அவரது அரசியல், கருத்தியல் பயணம் எதிர்முனையில் சென்றுவிட்டது.

சீமானின் சர்ச்சை 'சகவாசங்கள்'
தந்தை பெரியாருக்கு எதிராக சீமான் பேச தொடங்கியதில் இருந்து அவரது 'சகவாச'ங்கள் அனைத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. பாஜகவின் பி டீம் நாங்கள் அல்ல..என்று மேடைகள் தோறும் சத்தியமடித்து பேசும் சீமான், நடத்தும் சந்திப்புகள் அனைத்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பாமல் இல்லை.
ரஜினிகாந்துடன் சந்திப்பு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்தை திடீரென சீமான் சந்தித்து பேசினார். அப்போது, நடிகர் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்து வந்தார் சீமான். ரஜினிகாந்துடனான சீமான் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக தம்மை பகிரங்கமாக அறிவித்துக் கொள்ளும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
சங்கி என்றால் தோழன்
ரஜினிகாந்துடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சங்கி என்றால் சக தோழன் என்பது அர்த்தம் என புதிய விளக்கம் கொடுத்தார். சீமானின் இந்த அதிரிபுதிரியான விளக்கம் இன்றைக்கும் அரசியல் அரங்கத்தில் அதிர்வுகளைத் தந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரே மேடையில் செங்கோட்டையன், சீமான்
சென்னையில் பாஜகவின் தீவிர பிரசாரகரான பத்திரிகையாளர் நடத்திய நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றார். அதே நிகழ்ச்சியில் பாஜகவால், அதிமுகவின் புதிய ஷிண்டேவாக களமிறக்கப்பட்ட செங்கோட்டையனும் பங்கேற்றார். தந்தை பெரியாரை மிக இழிவாக சீமான் பேசி வந்ததன் தொடர்ச்சியாக பாஜக தரப்புடன் சீமான் நெருக்கம் காட்டுவதாக இந்த நிகழ்ச்சி பார்க்கப்பட்டது.
நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பா?
இதனைத் தொடர்ந்து சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்ததாக கூறப்பட்டது. சீமானைப் போலவே செங்கோட்டையனும் சந்தித்ததாக தகவல் வெளியானது. இந்த சந்திப்பை மேலோட்டமாகவே மறுத்து வருகிறார் சீமான். ஆனால் செங்கோட்டையனோ, இந்த சந்திப்புக்குப் பின்னர், சட்டசபையில் பகிரங்கமாக அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அனைவரும் வெளியே சென்ற நிலையில் ஒற்றை ஆளாய் செங்கோட்டையன் மட்டுமே சட்டசபைக்குள் இருந்து சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றது, பூனைக்குட்டி வெளியே வந்ததாகிவிட்டது.
ஒரே மேடையில் அண்ணாமலை, சீமான், பாரிவேந்தர்
இதே நாளில்தான் மற்றொரு பூனைக்குட்டியும் பட்டவர்த்தனமாக வெளியே வந்தது. பாஜக கூட்டணியின் பாரிவேந்தரின் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மேடைக்கு செல்வதற்கு முன்னதாக அண்ணாமலையும் சீமானும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பாஜக பக்கம் வீசும் சீமான் காற்று
தமிழ்நாட்டில் சீமான் கடந்த சில மாதங்களாக சந்தித்த, பங்கேற்ற நிகழ்வுகள், சீமானின் பேச்சுகள் அனைத்துமே பாஜக பக்கமே 'நாம் தமிழர்' காற்று பலமாக வீசிக் கொண்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications