எல்லாமே பச்சையாக மாறிய தமிழக மேப்.. நாளை முதல் மழை இருக்காது.. நற்செய்தி சொன்ன வானிலை மையம்
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நாளை முதல் மழை இருக்காது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
வங்கக் கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 5 நாட்களாக மழை கொட்டி வருகிறது. சென்னையிலும் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருவதால் சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
வேளச்சேரி, அம்பத்தூர், பெரம்பாக்கம் , பட்டாளம், மூலகொத்தளம், வியாசர்பாடி, தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மின்சாதன பொருட்கள், சோஃபா, கட்டில், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.

வங்கக் கடல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வங்கக் கடலில் காற்றழுத்தம் உள்ளிட்டவற்றால் இந்த கனமழை ஏற்பட்டுளளது. வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கிறது. இதனால் வட கடலோர மாவட்டங்களிலும் ஆந்திராவிலும் கடுமையான காற்று வீசி வருகிறது.

சென்னையில் மின்சாரம்
தமிழகம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். காலை நேரத்திலும் ஜன்னல் வழியாக குளிர்ந்த காற்று வீசுவதால் அவை மூடப்பட்டு வீடே இருள் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் மழை இருக்காது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தவுடன் மழை படிப்படியாக குறையும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் வானிலை அறிக்கையில் அதன் வரைப்படம் முழுவதும் பச்சை நிறத்தால் நிரப்பப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி
இதனால் சென்னை உள்பட தமிழகத்திற்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. அதே நேரத்தில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும் மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications