Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிராமம் டூ மாநகரம் வரை! கருணாநிதி உருவாக்கிய மருத்துவ உட்கட்டமைப்பு! தமிழக அரசு போட்ட லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை கருணாநிதி உருவாக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை பட்டியலாக வெளியிட்டுள்ளது தமிழக அரசு. கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் அரசு விடுத்துள்ள பதிவு வருமாறு;

''பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவத் துறை என்ற கட்டமைப்பு மட்டும் இருந்துவரும் நிலையில் இங்கே மாவட்ட அளவில் தலைமை மருத்துவமனை, வட்ட அளவில் மருத்துவமனை, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 24 மணி நேரமும் இயங்கும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமங்களை ஒருங்கிணைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமவாரியாகத் துணை சுகாதார நிலையங்கள் என அபாரமான மருத்துவ உட்கட்டமைப்பைத் தமிழ்நாட்டில் உருவாக்கினார் கலைஞர்.

 From village to city! Medical infrastructure created by Karunanidhi! Tamilnadu government put the list!

இன்று, பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் குறைந்த வருவாய் கொண்ட குடும்பத்தினருக்கு சுகாதாரக் காப்பீடு வழங்குகிறது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதல் இடம் பெற்றிருக்கிறது. இதற்குக் காரணம் நம்முடைய மகத்தான மருத்துவக் கட்டமைப்புதான்.

பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் எனும் காப்பீட்டுத் திட்டம் 2018 ஆம் ஆண்டின் இறுதியில்தான் ஆரம்பிக்கப்பட்டது. இதை 10 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. சிந்தித்தவர் கலைஞர். 2009 ஆம் ஆண்டில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கினார். இந்தத் திட்டத்தில் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு ரூ.1 லட்சம் வரை காப்பீடு வழங்கப்பட்டது. 1 கோடி ஏழைக் குடும்பங்கள் உயிர் காக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற உதவியது. இன்று, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக இது புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது.

1973-ஆம் ஆண்டில் கலைஞர் கண்ணொளித் திட்டம் கொண்டுவந்தார். கண் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை பெறுவது என்பது எளியவர்களைப் பொறுத்தவரை எட்டாக்கனியாகவே இருந்துவந்த காலத்தில், கட்டணம் ஏதுமின்றி ஏழை மக்கள் தங்களுடைய கண்பார்வைக் குறைபாடுகளுக்கு சிகிச்சை பெறும் வாய்ப்பை இந்தத் திட்டம் வழங்கியது. இதேபோல், முதன்முதலில் இலவசக் கண் சிகிச்சை முகாம் அமைத்துப் பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெறக் காரணமாக இருந்தவர் கலைஞர் தான்.

செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக Cochlear Implant அறுவைச் சிகிச்சைத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியவரும் கலைஞரே. லட்சங்களில் செலவுபிடிக்கும் இந்த சிகிச்சை ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைக்க வழிவகுத்தது; இத்திட்டத்தினை உலக சுகாதார நிறுவனமே வியந்து பாராட்டியது.

நிர்வாக வசதிக்காகப் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படும்போது, அந்த மாவட்டங்களிலும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளையும் தாலுகா அரசு மருத்துவமனைகளையும் அமைத்தார் கலைஞர். ஒன்றிய அரசுடன் இணைந்து கலைஞர் கொண்டுவந்த 108 ஆம்புலன்ஸ் திட்டம் ஒரு நல்வாய்ப்பாய் அமைந்தது. அவசர காலத்தில் லட்சக்கணக்கானவர்களுக்குப் பயன்படும் திட்டமாக இது மலர்ந்தது.

சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்குப் புதிய கட்டடம் கட்டித்தந்தார். வருமுன் காப்போம் திட்டம், நலமான தமிழகம் திட்டம் என்பன போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் வழியாகப் பயன்பெற்றவர்கள் ஏராளம். மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தனிச்சட்டத்தையும் அவர் இயற்றினார்.

எந்த நேரத்திலும் மருத்துவ உதவி என்ற உயரிய எண்ணம், சிகிச்சை பெற வேண்டி யாரும் தாங்கள் வாழும் இடத்திலிருந்து அதிக தூரம் பயணிக்கக் கூடாது என்ற அக்கறை, அதிகம் செலவு பிடிக்கக்கூடிய சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாமல் எளியவர்கள் யாரும் துவண்டுவிடக் கூடாது என்ற கரிசனம், நோய்நொடியற்ற வலுவான அடுத்த தலைமுறை உருவாக வேண்டும் என்ற கனவு இவை எல்லாம்தான் கலைஞர் கொண்டுவந்த மகத்தான நலத் திட்டங்கள் சொல்லும் செய்தி.

இன்று அவரின் பெயரைத் தாங்கியிருக்கும் மருத்துவமனையோ எல்லாத் தரப்பினருக்கும் உயர்தர சிகிச்சை தருவதற்காக உருவாகியிருக்கிறது. இருதயவியல், நரம்பியல், புற்றுநோய், குடல் இரைப்பை, சிறுநீரகம், ரத்தநாளம், மூளை ரத்தநாளக் கதிரியல் உள்ளிட்ட 12 உயர் சிறப்புத் துறைகளையும் நவீன சிகிச்சை வசதிகளையும் கொண்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, நம் மருத்துவத் தலைநகருக்கு சூட்டப்பட்ட மகத்தான மகுடம்.'' இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+