சென்னையில் 23வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை - விலை குறையுமா
சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 23 நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒரு சில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயை எட்டியது. எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மெதுவாக உயர்ந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா 2வது அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை நாடுமுழுவதும் கணிசமாக குறைந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது.
கடந்த நவம்பர் மாதம் முதல் பெட்ரோல்,டீசல் உயர்த்தப்பட்டவில்லை. நான்கு மாதங்களாக எந்த வித மாற்றமுமின்றி பெட்ரோல், டீசல் விலை விற்பனையானது. பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா,மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல், டீசல் விலைகள் படிப்படியாக உயர்த்தப்பட்டன.
சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலை உயர்வு சமானிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது. சமையல் கேஸ் விலையும் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அதற்கு பதிலடியாக கலால் வரியை குறைக்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
இந்நிலையில், தொடர்ந்து 23வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. . அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications