மாற்றமேயில்லை.. இன்றும் பெட்ரோல் டீசல் அதே விலையில் விற்பனை.. தொடரும் அதிருப்திகள்

மாற்றமேயில்லை.. இன்றும் பெட்ரோல் டீசல் அதே விலையில் விற்பனை.. தொடரும் அதிருப்திகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து 13வது நாளாக இன்றும், பெட்ரோல் ரூ.102.63 க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகி வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த மே -21-ம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அதனை தொடர்ந்து சென்னையில் மறுநாளே அதாவது 22-ம் தேதியே, பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல்ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதாவது, சென்னையில் 45 நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை நீடித்து வந்தது. குறிப்பாக, சென்னையில் மே 21 வரையில் நீண்ட நாட்களாக பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வந்தது.

 இன்றும் அதே விலை

இன்றும் அதே விலை

இந்த விலை குறைப்பு கடந்த 22-ந் தேதிதான் குறைந்தது... அதுவரை விலையில் மாற்றம் செய்யப்படாமலேயே இருந்த நிலையில், இந்த திடீர் விலை குறைப்பால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சற்று நிம்மதி அடைந்தனர்.... அப்போதிருந்து இன்றுவரை அதே விலையில் பெட்ரோல் விற்பனையாகிறது.. 13வது நாளாக இன்றும் அதாவது ஜுன் 3 -ம் தேதி, பெட்ரோல் ரூ.102.63 க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகி வருகின்றன.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

இருந்தாலும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தி கொண்டுதான் இருக்கிறது.. அதிலும் தமிழக பாஜக இந்த விவகாரத்தை விடவில்லை.. 3 நாளைக்கு முன்பு அண்ணாமலை, கோட்டை முற்றுகை போராட்டமும் நடத்தினார். இது திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

வார்னிங் தந்த அண்ணாமலை

வார்னிங் தந்த அண்ணாமலை

அதுமட்டுமல்லாமல், மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை குறைத்துள்ளது, ஆனால், தமிழக அரசு குறைக்கவில்லை.. இனியும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் போராட்டம் தீவிரமாக நடக்கும் எனக் கூறியுள்ளார். பெட்ரோல் விலை குறைப்பு வரும்வரை போராட்டம் நிற்காது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்... இதற்கு ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பதிலடி தந்து வந்தாலும், பாஜக தன் போக்கில் பிடிவாதத்தை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+