பெட்ரோல், டீசல் இன்றைய நிலவரம்.. எப்போது விலை குறையும்? எரிபொருளுக்கு உயரும் டிமாண்ட்
பெட்ரோல், டீசல் தொடர்ந்து 56ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை 56வது நாளாக மாற்றமின்றி விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாகவும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.

கலால் வரி குறைப்பு
மே 21ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது.

56 நாட்களாக மாற்றமின்றி விற்பனை
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 56வது நாளாக சென்னையில் இன்றும் மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாகவும் விற்பனையாகி வருகிறது.பெட்ரோல் டீசல் விலை உயராதது மன நிம்மதியை அளித்தாலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்
கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் கூட்டத்தில், பேசியவர்கள் பெட்ரோல்- டீசல், கேஸ் விலை உயர்வினால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

டிமாண்ட் அதிகரிப்பு
இதனிடையே S&P Global commodity insights நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, கடந்த ஜூன் மாதம் பெட்ரோல், டீசல் எரிபொருட்களுக்கு டிமாண்ட் உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் ஒரு நாளைக்கு எரிபொருள் தேவை சுமார் 704,000 பேரல்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிட்டால் எரிபொருள் தேவை சுமார் 16.3% உயர்ந்துள்ளது.

விலை குறைப்பும் காரணம்
கடந்த மே 21ஆம் தேதி பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியில் 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 6 ரூபாயும் குறைக்கப்பட்டது. மேலும், ஜூன் மாதத்தில் பருவமழை தள்ளிப்போனது. இதன் விளைவாக ஜூன் மாதத்தில் பெட்ரோல், டீசல் பொருட்களுக்கு டிமாண்ட் உயர்ந்துள்ளதாக இந்த ரிப்போர்ட் கூறுகிறது. பெட்ரோல் நிலையங்களில் விலை மாறாமல் தொடர்ந்து நீடிப்பதும் டிமாண்ட் அதிகரிக்க இன்னொரு காரணம் என கூறப்படுகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications