6 ஆண்டுகளுக்கு பிறகு தெரியும் அதிசயம்.. இன்னைக்கு நைட்டு வானத்தை பார்க்க மிஸ் பண்ணாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பௌர்ணமி தினமான இன்று, வானில் தோன்றும் முழு நிலவு, வழக்கத்தை விட பெரியதாக தெரியும். இதற்கு பீவர் மூன் என்று பெயர். கடந்த 2019க்கு பிறகு இந்த நிலவு தற்போதுதான் தோன்றுகிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் நவம்பர் மாதங்களில் கடும் குளிர்காலம் தொடங்கும். குளிர் உறைபனி வரை செல்லும். எனவே, பீவர் எனப்படும் ஒரு வகை விலங்கு தனது கூட்டை தயார்படுத்த பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். இந்த விலங்குகளை பிடிப்பதற்கு பழங்காலத்தில் மக்கள் கூண்டுகளை தயார் செய்வார்கள். இந்த தயாரிப்பை நினைவுபடுத்தும் விதமாகவே பீவர் மூன்று என்று இந்த நவம்பர் மாத பௌர்ணமிக்கு பெயரிடப்பட்டிருக்கிறது.

Moon space earth

இன்று இரவு நிலவு வழக்கத்தை விட பெரியதாகவும், வெளிச்சமானதாகவும் தெரியும். காரணம், இது ஒரு சூப்பர் மூன் நிகழ்வு என்பதால்தான். பூமியை நிலவு சுற்றி வருகிறது. இந்த சுற்றுவட்ட பாதை சில நேரங்களில் நெருக்கமானதாக இருக்கும். அதாவது நிலவுக்கு பூமிக்கு கொஞ்சம் பக்கத்தில் வரும். இப்படி வரும் நேரங்களில் வழக்கத்தை விட நிலவு 14% பெரியதாகவும், 30% பிரகாசமானதாகவும் தெரியும்.

இந்தியாவிலிருந்தும் இந்த சூப்பர் மூன் நிகழ்வை பார்க்க முடியும். வானம் மேகமூட்டம் இல்லாமல் இருந்தால் முழுநிலவு அற்புதமாக தெரியும். முழு நிலவானது இந்திய நேரப்படி மாலை 6.49 மணியளவில் தனது அதிகபட்ச பிரகாசத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சென்னை, கோவை, மதுரை போன்ற நகர் பகுதிகளில் ஒளி மாசு அதிகமாக இருப்பதால், முழு நிலவை ரம்யமாக புகைப்படம் எடுக்க விரும்புவோர்கள், ஒளி மாசு குறைவாக உள்ள இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

சென்னையில் வசிப்பவர்கள் வாணியம்பாடி பகுதியில் உள்ள வைனு பப்பு கோள் ஆய்வகம் பகுதிக்கு சென்று நிலவை பிரகாசமாக புகைப்படம் எடுக்கலாம். இந்த பகுதியில் ஒளி மாசு குறைவாக இருக்கும்.

பௌர்ணமி தினத்தன்று இரவு நேர விலங்குகளின் நடத்தையில் மாற்றங்கள் இருக்கும். உதாரணமாக ஆந்தை போன்ற இரவு நேர வேட்டையாடிகள் அதிக அளவில் தென்பட வர வாய்ப்புகள் உண்டு. அதேபோல எலி போன்ற உயிரினங்கள் வேட்டையாடியகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள வலைகளிலே பதுங்கியிருக்கும். கடல்வாழ் உயிரினங்களிலும் சில மாற்றங்கள் இருக்கும். மற்றபடி மனிதர்களின் உளவியலில், பேய் பிடிப்பது போன்று எந்த மாற்றங்களும் ஏற்படாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+