“ரத்த” நிறத்தில் நிலா.. சூரியனுக்கு பின் வானில் நிகழும் “மேஜிக்” - நவம்பரில் முழு சந்திர கிரகணம்
சென்னை: அண்மையில் உலகம் முழுவதும் பகுதி சூரிய கிரகணம் தோன்றிய நிலையில் வரும் நவம்பர் மாதம் முழு சந்திர கிரகணம் தென்பட இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
சூரியனின் சுற்று வட்டப்பாதையில் பூமி உள்ளிட்ட 8 கோள்கள் சூரியனையும் சுற்றி வருகின்றன. அதேபோல் நிலாவும் பூமியை சுற்றி வருகிறது.
ஒரு கட்டத்தில் பூமியும், சூரியனும், சந்திரனும் நேர்கோட்டுக்கு வரும்போது நாம் அதை கிரகணம் என்று அழைக்கிறோம். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் கடந்த 25 ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது.

கிரகண காலம்
சூரியனுக்கு பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலா நகர்ந்து செல்லும்போது சூரியனின் ஒருபகுதி மறைந்து பிறைபோன்ற வடிவில் தெரிந்தது. இதைதான் விஞ்ஞானிகள் சூரிய கிரகணம் என்று அழைக்கின்றனர். ஒரு கிரகண காலம் என்பது சுமார் 35 நாட்கள் என்று கூறப்படுகிறது.

முழு சந்திர கிரகணம்
இந்த காலத்தில் 2 கிரகணங்கள் ஏற்படும். சில சமயங்களில் 3 கிரகணங்கள் கூட ஏற்படலாம். இந்த நிலையில் தான் வரும் நவம்பர் 8 ஆம் தேதி இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் வானில் ஏற்பட இருக்கிறது. 35 நாட்களுக்குள் நிகழும் 2 வது கிரகணமாக இது பார்க்கப்படுகிறது.

ரத்த சிவப்பு நிலா
முழு சந்திர கிரகணம் என்பது பூமியுடைய நிழலின் இருண்ட பகுதிக்குள் முழு சந்திரனும் வரும் நிகழ்வு. அம்ப்ரா என்று அழைக்கப்படும் இந்த சந்திர கிரணத்தின் விளைவாக சந்திரன் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

உலக நாடுகள்
இந்த முழு சந்திர கிரகணத்தை ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலும், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபில் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் பகுதிகளிலும் காண முடியும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் தெரியுமா?
இந்தியாவிலும் இந்த சூரிய கிரணத்தை நம்மால் பார்க்க முடியும். குறிப்பாக கடந்த முறை சூரிய கிரகணம் குறைவான நேரம் தென்பட்ட மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு இந்திய பகுதிகளில் முழு சந்திர கிரகணத்தை தெளிவாக காண முடியும். மற்ற பகுதிகளில் பகுதி சந்திர கிரகணத்தை மட்டுமே பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

நேரம்
இந்திய நேரப்படி நவம்பர் 8 ஆம் ஆண்டு பிற்பகம் 2:48 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம் மாலை 6:19 மணி வரை தென்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றார்கள். அதே நேரம் சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்க கருவிகள் இருப்பதைபோல் முழு சந்திர கிரகணத்தை பார்த்து ரசிக்க கருவிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கிரகணம்
கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் பகுதி சூரிய கிரகணம் தோன்றிய நிலையில் வரும் நவம்பர் 8 ஆம் தேதி தோன்றும் சந்திர கிரகணமே 2022 ஆம் ஆண்டின் கடைசி கிரகணமாக உள்ளது. இதற்கு பின் 5 ஆண்டுகள் கழித்து 2027 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2 ஆம் தேதி அடுத்த சூரிய கிரகணம் நிகழும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications