முதல்வர் ஸ்டாலின் கையில் முழு ரிப்போர்ட்! அவசரக் கூட்டத்தால் பதற்றத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள்!
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நாளை நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொருவரின் செயல்பாடுகள் குறித்த முழு ரிப்போர்ட் முதல்வர் ஸ்டாலின் வசம் உள்ளது.
இதனால் பல மாவட்டச் செயலாளர்கள் சற்று பதற்றத்தில் தான் இருந்து வருகிறார்கள். கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து விவாதிக்க என முரசொலியில் பொருள் போடப்பட்டிருந்தாலும் நாளை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள சப்ஜெக்டே வேறாம். இதனால் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் அனல் கக்குவார் எனத் தெரிகிறது.

குறிப்பாக தென் மாவட்ட திமுக செயலாளர்கள் சிலருக்கு நாளைய தினம் முதல்வரிடம் கடுமையான டோஸ் விழும் எனக் கூறப்படுகிறது. உட்கட்சி பிரச்சனை, கவுன்சிலர்கள் செய்யும் கலகம் குறித்தெல்லாம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் வறுத்தெடுப்பார் எனத் தெரிகிறது. இதனால் நாளை என்ன நடக்குமோ முதல்வர் நம்மிடம் என்ன கேள்வி கேட்பாரோ என பலரும் ஜெர்க் ஆகியுள்ளனர்.
அதேபோல் கட்சித் தொண்டன் கொண்டு வரும் கோரிக்கைகளை செவிமடுக்காத அதை நிறைவேற்றிக் கொடுக்காத மாவட்டச் செயலாளர்கள் பட்டியலும் முதல்வர் வசம் உள்ளதாம். கொரோனே பேரிடருக்கு பிறகு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும். இந்த முறை அவசரமாக கூட்டம் நடைபெறவுள்ளதால் காணொலியை தேர்வு செய்திருக்கிறார் முதல்வர்.
இதனிடையே கருணாநிதி 5ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. இக்கூட்டம் முடிந்த பிறகு தென் மாவட்டங்களில் 2 முதல் 3 மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications