ஜி 20.. சுவாமிமலை டூ டெல்லி.. உலகின் உயரமான நடராஜர் சிலையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம்
சென்னை: உலகின் மிக உயரமான நடராஜரின் சிலை உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் சுவாமிமலை நகரிலிருந்து டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லும் அரிதான, சிறப்பான பணியை NTC லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்திருக்கிறது.
டெல்லியில் சமீபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்ற போது அந்த மண்டபத்தில் நிறுவப்படுவதற்காக நடராஜர் சிலை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்து மத கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தின் அற்புதமான அடையாளமாகத் திகழும் அந்த நடராஜரின் சிலை 28 அடி உயரத்தையும், 21 அடி அகலத்தையும் கொண்டு அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சிவபெருமானின் நடராஜ ரூபம் என்பது நடன கலையின் தெய்வமாக போற்றப்படுவதாகும். ஆனால் நடராஜர் ரூபம் என்பது மதம், ஆன்மிகம் என்பதைத் தாண்டி அறிவியலுடன் தொடர்புடையதாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலின் மூலவராக நடராஜர் இருக்கிறார். சபாநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.
சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் ஆகாயத்தலமாகவும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. இந்த ஆலயம் மனித உடலுடன் தொடர்புடையதாக இந்த கோவில் அமைப்பட்டுள்ளது என்பது தான் தனிச்சிறப்பாகும். அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தலைமையகத்திலும் 17 அடி உயர நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அறிவியல், விண்வெளி ஆகியவற்றுடன் தொடர்புடையதை குறிக்கும் வகையில் டெல்லியில் நடக்க உள்ள ஜி20 மாநாட்டு வளாகத்தில் உலகின் மிக உயரமான நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சோழர் காலத்தில் இருந்து வழி வழியாக பாரம்பரிய சிற்பங்களை உருவாக்கி வரும் சுவாமிமலையை சேர்ந்த 61 வயதான ஸ்ரீகந்த ஸ்தபதி, தனது சகோதரர்கள் ராதாகிருஷ்ண ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்தபதி ஆகியோருடன் சேர்ந்து சிலையை உருவாக்கினார். சிற்ப சாஸ்திர முறையில், சரியான முறையில் இந்த நடராஜர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நடராஜர் சிலையை அனைவருமே வியந்து பாராட்டினர். இவ்வளவு பெரிய சிலை தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு எப்படி கொண்டு வரப்பட்டது என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம்.

இந்த சவாலான செயலை செய்து முடித்திருப்பது NTC லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம். சுவாமி மலையில் இருந்து இந்த நடராஜர் சிலை தலைநகர் டெல்லிக்கு பத்திரமாக எடுத்துச் செல்லும் இப்பயணம் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்பயணத்தை வெற்றிகரமாக NTC லாஜிஸ்டிக்ஸ் நிறைவுசெய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.
இந்த மாபெரும் நடராஜர் சிலையை சாலை போக்குவரத்து வழியாக எடுத்துச் செல்வதில் எதிர்கொள்ளப்பட்ட முக்கியமான சவால்களுள் ஒன்றாக அதன் மிகப்பெரிய உயரம் மற்றும் அகலம் என்ற அளவீடுகள் இருந்தது. அற்புதமான கலை உணர்வோடு வடிக்கப்பட்டிருந்த இந்த நுட்பமான சிலையை பாதுகாப்பாக கையாளவும், பத்திரமாக போக்குவரத்துக்கு எடுத்துச் செல்லவும் தீவிரமான ஆயத்த பணிகளை செய்து தேவையான சாதனங்களை NTC லாஜிஸ்டிக்ஸ் திறம்பட பயன்படுத்தியிருந்தது.
விலைமதிப்பற்ற கலை சின்னமாகவும் மற்றும் ஆன்மிக அடையாளமாகவும் திகழும் இச்சிலையை பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கு தீவிரமான அக்கறையும், மிகப்பெரிய அளவிலான திட்டமிடல் பணியும் NTC லாஜிஸ்டிக்ஸ் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.
போக்குவரத்து சார்ந்த நுட்பமான சிக்கல்கள், சவால்களையும் கடந்து, கலாச்சார புரிதல் மற்றும் செயலாக்கத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடும் நடராஜர் சிலையை சாலைவழியாக எடுத்துச் செல்லும் நடவடிக்கைக்கு தேவைப்பட்டன.
நடராஜரின் சிலை மக்களின் அன்புக்கும், பக்திக்கும், மரியாதைக்கும் உரியவை என்பதால் அதன் தூய்மைக்கு பங்கம் வராமல் எடுத்துச் செல்வது மிக முக்கிய அம்சமாக இருந்தது. போகும் வழியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. போக்குவரத்து நெரிசல் மிக்க தோப்பூர் மலைப்பகுதி, ஓசூரின் குறுகலான ஒற்றை பாதை சாலை வழியாக கடந்து செல்வது, தெலங்கானாவின் அடிலாபாத்திலிருந்து மத்திய பிரதேசத்தின் நாக்பூர் வரை தீவிர போக்குவரத்து நெரிசல் உள்ள 195 கிமீ நீளம் கொண்ட வழித்தடத்தின் வழியாக பயணிப்பது ஆகியவை இவற்றுள் சிலவாகும்.
"நடராஜர் சிலையின் இப்பயணம், சிவபெருமானின் தெய்வீக அண்டவெளி நடனத்தின் எடுத்துக்காட்டாகவே இருந்தது. பல்வேறு கலாச்சாரங்கள் வேறுபாடுகள் இருப்பினும், நமது நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக இந்த நீண்ட பயணம் இருந்தது.
கலை நுட்பத்தின் திறன் மற்றும் ஆன்மிகத்தின் அடையாளமாக டெல்லியின் பிரகதி மைதான் அமைவிடத்தின் பாரத் மண்டபத்தில் இந்த மாபெரும் சிலை நிறுவப்பட்டிருப்பதை காண்பதிலும், அப்பணிக்கு உதவியிருப்பதிலும் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
என்று NTC குழுமத்தின் நிறுவனர் மற்றும் சேர்மன் டாக்டர். கே. சந்திரமோகன் தெரிவித்தார்.
நடராஜர் சிலையின் நுட்பமான கலை அம்சங்களையும், கட்டமைப்பின் ஒருங்கமைவையும் கவனமாக பாதுகாப்பது, இந்த மாபெரும் போக்குவரத்து சவாலின் சிக்கல்களை மேலும் அதிகமாக்கியது. ஜி20 உச்சி மாநாடு அமைவிடத்திற்கு எந்த பாதிப்புமின்றி, இச்சிலை சென்றடைவதை உறுதி செய்ய தொடர்ச்சியான கண்காணிப்பும், சிலையின் பராமரிப்பும் இன்றியமையாத பணியாக இருந்தன. சிலையின் அனைத்து பகுதிகளும் எவ்வித பாதிப்புமின்றி தயாரிக்கப்பட்ட அதே நிலையில் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்வதற்கு தளராத அர்ப்பணிப்போடும், பொறுப்புறுதியோடும் இந்த பணி NTC குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
2500 கிலோமீட்டர் தூரம் கொண்டதாக இப்பயணம் இருந்தது. இந்த மிகப்பெரிய சவாலை சமாளிக்க மாநில அரசுகள் மற்றும் காவல் துறையினரின் ஒருங்கிணைப்போடு போக்குவரத்தை எளிதாக்க ஒரு பசுமை வழித்தடம் உருவாக்கப்பட்டது. போக்குவரத்தை திறம்பட இது கையாண்டதோடு, தடங்கலின்றி இச்சிலையை தாங்கியிருந்த வாகனம் பாதுகாப்பாக பயணிப்பதையும் உறுதிசெய்தது. பாதையில் இருந்த அனைத்து தடைகளையும், சவால்களையும் வெற்றிகரமாக சமாளித்து 88 மணிநேரங்கள் என்ற சாதனை காலஅளவிற்குள் 2,500 கிமீ என்ற நீண்ட பயணத்தை நடராஜர் சிலை நிறைவுசெய்திருக்கிறது.
இந்த மாபெரும் திட்டத்தின் வெற்றி, NTC லாஜிஸ்டிக்ஸ்-ன் பல்வேறு குழுக்களில் தொடர்ச்சியான கடும் முயற்சிகளின் விளைவாகும். கலை மற்றும் ஆன்மிகத்தின் விலைமதிப்பற்ற அடையாளமான நடராஜர் சிலை பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்ய இவர்கள் அனைவரின் தளராத முயற்சி பாராட்டுக்குரியது.

மத்திய அரசின் அமைச்சக அதிகாரிகளுடனான இவர்களது நெருங்கிய ஒத்துழைப்பு, இந்த மாபெரும் லாஜிஸ்டிக்ஸ் செயல்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைவதை உறுதிசெய்தது. இந்த மாபெரும் சிலையை பாதுகாப்பாக உரிய நேரத்திற்குள் டெலிவரி செய்வதை சாத்தியமாக்கியதில் மிக முக்கிய பங்காற்றிய வாகன ஓட்டுனர்களுக்கு சிறப்பு பாராட்டுகளும், நன்றியும் உரியவை. இச்செயல்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது, NTC லாஜிஸ்டிக்ஸ்சின் திறன்களுக்கு சான்றாகத் திகழ்கிறது.
இந்தியாவின் பாரம்பரியத்தையும், ஆன்மிக செழுமையையும் பேணி பாதுகாப்பதில் கொண்டிருக்கும் உறுதியையும் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் செயல்பாட்டில் திறனையும் இந்த மாபெரும் செயல்திட்டத்தின் வெற்றிகரமான நிறைவு உலகிற்கே சுட்டிக்காட்டுகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications