ஜி20 உச்சி மாநாட்டில் மாபெரும் திருப்பம்.. 21வது உறுப்பினராக இணைந்த ஆப்ரிக்க யூனியன்! இந்தியா அதிரடி
சென்னை: டெல்லியில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் ஆப்ரிக்க யூனியன் இணைந்துள்ளது. ஜி 20 குழுவில் 21வது நிரந்தர உறுப்பினராக ஆப்ரிக்க யூனியன் இணைந்துள்ளது.
ஜி 20 குழுவில் மிகப்பெரிய திருப்பமாக, ஜி 20 வரலாற்றில் மிக முக்கியமான விஷயமாக, உலக வரலாற்றில் மாபெரும் அரசியல் முடிவாக இது பார்க்கப்படுகிறது. 2023 G20 உச்சிமாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மையத்தில் (ICapanvent International Exhibition) நடைபெற்று வருகிறது . இது G20 (Group of Twenty) உச்சிமாநாட்டின் பதினெட்டாவது கூட்டமாகும். இந்தியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் முதல் ஜி20 மாநாடு இதுவாகும்.

ஜி20 டெல்லி உச்சி மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. ஜி 20 குழுவிற்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியாவின் தலைமை பதவி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. G20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றையத்தை உள்ளடக்கியது (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி , யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்.
இந்த ஜி 20 உறுப்பினர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் மேல் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில்தான் தற்போது இந்த குழுவில் 21வது உறுப்பினராக ஆப்ரிக்க யூனியன் இணைந்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இந்திய தலைநகரில் நடைபெறும் உச்சிமாநாட்டைத் தவிர்க்க முடிவு செய்தனர். அமெரிக்க அதிபர் பிடன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வர இருக்கிறார்.
இந்தியாவில் நடக்க உள்ள G20 மாநாட்டில் பின்வரும் ஆறு நிகழ்ச்சி நிரல்கள் செய்யப்பட உள்ளன. இன்று பிரதமர் மோடி ஆப்ரிக்க யூனியனை இந்த குழுவில் அறிமுகம் செய்து நிரந்தர உறுப்பினராக அறிவித்தார் . உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடுகளை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட குழு, ஆப்பிரிக்க யூனியனை தங்கள் உறுப்பினர்களில் ஒன்றாக சேர்த்து அரசியலில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் 55 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி 20ல் இணைந்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்து நாடு இல்லாத ஒரு கண்டம் இந்த குழுவில் இணைந்துள்ளது. பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, பாதுகாப்பு ரீதியாக ஆப்ரிக்காவை இது புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னெடுப்பின் கீழ் ஆப்ரிக்கா இந்த குழுவில் இணைந்துள்ளது. இதன் மூலம் ஆப்ரிக்க நாடுகள் இந்தியாவை பாராட்ட தொடங்கி உள்ளன. இந்தியாவின் மாபெரும் அரசியல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
ஜி 20 கூட்டத்தின் தீம் என்ன?:
பசுமை வளர்ச்சி, காலநிலை நிதி & வாழ்க்கை
துரிதப்படுத்தப்பட்ட, உள்ளடக்கிய & மீள்திறன் வளர்ச்சி
SDG களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது.
தொழில்நுட்ப மாற்றம் & டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு
21 ஆம் நூற்றாண்டிற்கான நிறுவனங்கள் உட்கட்டமைப்பு
பெண்கள் வளர்ச்சி
G20 இல் ஆப்பிரிக்க ஒன்றியம் இதில் சேர்க்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அளிக்கும் வாய்ப்புகள் உள்ளன. டெல்லி G20 உச்சி மாநாட்டில் இதை பற்றி முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்காக சர்வதேச தலைவர்கள் பலர் டெல்லிக்கு வந்து உள்ளனர். இதனால் டெல்லி மற்றும் உத்தர பிரதேச விமான நிலையங்களில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கே சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் டெல்லியில் மொத்தமாக பாதுகாப்பு மாற்றப்பட்டு உள்ளது. நகரத்திற்கு உள்ளே பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications