சாதிய ரீதியாக பாகுபாடு காட்டியது கிடையாது.. மணீஷ் நரவனே நல்ல அதிகாரி.. ககன் தீப் சிங் பாராட்டு
சென்னை: தன் மீது சாதிய வன்கொடுமை புகார் கூறிய ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணிஷ் நரவனே சிறந்த அதிகாரி என மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் சுகாதாரத் துறை செயலாளருமான ககன் தீப் சிங் பேடி பாராட்டியிருந்தார்.
சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ககன்தீப் சிங் பேடி தன்னை சாதிய ரீதியில் துன்புறுத்தியதாக ஈரோடு கூடுதல் ஆட்சியர் டாக்டர் மணீஷ் நரவனே பரபரப்பு குற்றச்சாட்டை அளித்திருந்தார். இது குறித்து தலைமைச் செயலாளருக்கு அவர் 2 பக்க புகார் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அந்தப் புகாரில் நான் டாக்டர் மணீஷ் நரவனே தற்போது ஈரோடு கூடுதல் ஆட்சியராக உள்ளேன். நான் சென்னை மாநகராட்சியில் துணை சுகாதார ஆணையராக இருந்த போது ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன். கடந்த ஜூன் 14 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி வரை நான் அந்த பதவியில் இருந்தேன்.
அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி என்னை சாதி ரீதியில் பாகுபாடு காட்டி துன்புறுத்தினார். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டே என்னை வெகுவாக அடக்குமுறைக்கு ஆளாக்கினார். பணி நிமித்தமாக என்னை மிகவும் துன்புறுத்தினார். கோப்புகளில் கையெழுத்திடுவதை தாமதப்படுத்தினார்.
ஒரு கையெழுத்துக்காக இரவு வெகு நேரம் காத்திருக்கச் செய்வார். ஒரு வழியாக இரவில் காத்திருந்து அவரிடம் கோப்புகளில் கையெழுத்து வாங்க சென்றால் தம்பி இப்போது லேட் ஆகிவிட்டது. நாளை பார்த்துக்கலாம் என்பார். இது தினமும் நடந்தது. எனக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஜெ ராதாகிருஷ்ணனுக்கும் இடையே விரிசல் ஏற்படச் செய்தார். அவருடைய கொடுமைகள் தாங்காமல் நான் மன அழுத்தத்திற்கு சென்றேன். ஒரு கட்டத்தில் நான் அவரிடம் சொல்லியும் அதை அவர் பொருட்படுத்தாததால் தற்கொலைக்கு முடிவு செய்தேன். என் தந்தைதான் என்னை தேற்றி ஊக்கப்படுத்தினார்.
ககன் தீப் சிங் செய்த கொடுமைகள் எல்லாம் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது என தனது புகாரில் மணீஷ் தெரிவித்துள்ளார். அனைத்து இடங்களிலும் நேர்மையான அதிகாரி, நல்ல அதிகாரி என பெயர் பெர்ர ககன்தீப் சிங் மீது இப்படியொரு புகாரா என அதிர்ச்சி ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ் இந்து நாளிதழுக்கு ககன்தீப் கூறுகையில் மணீஷ் நல்ல அதிகாரி, அவரின் கடிதத்தை நான் படித்தேன்.
அவருடைய கடிதம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கொரோனா காலத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றினார். சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய காலத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றினார். அவருடைய பணிகளை பாராட்டி நான் சான்றிதழ்களை அளித்துள்ளேன். அவருடைய சர்வீஸ் ரெக்கார்டு என அழைக்கப்படும் பணி பதிவேட்டில் அவர் சிறப்பாக பணியாற்றினார் என பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தேன். யாரும் ஒரு போதும் சாதிய ரீதியாக பாகுபாடு காட்டியது கிடையாது என விளக்கமளித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications