சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்.. ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் கடந்த 2020 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் பல அதிரடிகளை செய்து வருகிறார்.

தமிழக முதல்வரின் தனி செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டனர். அது போல் தமிழக தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
இதனிடையே சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதும் தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார்கள் ஸ்டாலினின் காதுகளை எட்டின. மேலும் இந்த இக்கட்டான சூழலில் அனுபவம் வாய்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசு கருதியது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ககன் தீப் சிங் பேடி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். தற்போது தமிழக வேளாண் துறை முதன்மை செயலாளராக உள்ளார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications