ஊரே அழிஞ்சிருச்சு.. எல்லாம் அழிஞ்சு போச்சே.. புஷ்புவனம் குப்புசாமி கண்ணீர் பாடல்
புஷ்பவனம் குப்புசாமியின் கண்ணீர் வீடியோ வைரலாகிறது.
Recommended Video

சென்னை: "குடியிருக்க வீடுமில்லை.. படுக்க ஒரு பாயுமில்லை.. பார்க்க ஒரு நாதியில்லை" என்று கண்ணீருடன் தன் மாவட்ட நிலைமையை பாடி உணர்த்தி இருக்கிறார் நாட்டுப்புற கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி.
கஜா புயலுக்கு நாசமானதில் நாகை மாவட்டமும் ஒன்று. இங்கு தற்போதையை நிலைமையை பாடலாக அவர் வெளிப்படுத்தி உள்ளதுடன், உதவிக்கும் நல்லுளங்களை பாடி அழைத்துள்ளார்.
[நான் ஒருத்தன் உதவி என்ன பிரயோஜனம்? .. புயல் பாதித்த மக்களுக்கு உதவ புஷ்புவனம் குப்புசாமி அழைப்பு]

இது சம்பந்தமாக புஷ்பவனம் குப்புசாமி பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பாடல் வரிகள் இதோ:
கஜா புயல் கோரதாண்டவம் ...
பாட்டன் பாட்டி வச்ச மரம்
பரம்பரையா வந்த மரம்
அப்பன் ஆத்தா நட்ட மரம்
ஆதரவா நின்ற மரம்
நான் பார்த்து வச்ச மரம்
நல்ல படி காய்ச்ச மரம்
புள்ளக்குடி படிப்புக்கு பூத்த மரம்.. காய்ச்ச மரம்
வேரோடு சாய்ஞ்சி கிடக்குதே ஐயேயோ
எங்கள் விவசாயம் பாழா போச்சுதே..
ஒருநாள் அடிச்ச புயலில்
ஊரே அழிஞ்சிடுச்சு
கூரை வீடு, ஓட்டு வீடு,
குடும்பம் காத்த ஆடு, மாடு
எல்லாமும் அழிஞ்சு போச்சுதே ஐயையோ
எங்க ஏழை வாழ்க்கை சோகமாச்சுதே
குடிக்க நல்ல தண்ணியில்லை
குடியிருக்க வீடுமில்லை
படுக்க ஒரு பாயுமில்லை
பார்க்க ஒரு நாதியில்லை
மின்சாரம் தொலைபேசி எதுவுமே இயங்கவே இல்லை
சம்சாரம் பிள்ளைங்களுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை
கஞ்சிக்கே வழியுமில்லை
கண்துடைப்பார் யாருமில்லை
கெஞ்சினாலும் அழுதாலும் கேட்க ஒரு நாதியில்லை
வேதாரண்யம் தீவு போல விடுபட்டு போச்சுதயோ
வேதனை சொல்லி அழ நெஞ்சுக்குழி அடைக்குதய்யா
நான் பிறந்த புஷ்பவனம் சின்னாபின்னமாச்சுதய்யா
பசுமையா இருந்த ஊரு வெடடவெளியாச்சுதய்யா
வேதனையை தீர்த்து வைக்க வேதாரண்யம் வந்துடுங்க
விம்மியழும் ஏழை முகம் பார்த்து ஆறுதல் சொல்லுங்கோ
உங்களை கைக்கூப்பி உதவி கேட்கின்றோம்
ஏழைக்கு கைகொடுக்க இந்த பக்கம் வந்திடுங்க
ஏதேனும் செஞ்சிடுங்க...
இவ்வாறு புஷ்பவனம் அந்த வீடியோவில் விம்மி விம்மி அழுது பாடி உதவி கேட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications