தமிழக அரசின் புயல் நிவாரண பணிகளுக்கு நிதி வழங்குங்களேன்.. 100% வரி விலக்கு உண்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுமக்களின் நிதி உதவியை தமிழக அரசு எதிர்பார்க்கிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள, ரூ.1000 கோடி நிதி உதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Gaja cyclone rehabilitation: TamilNadu government seeking financial assistance from the people

மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தமிழக அரசு எடுத்து வரும் மாபெரும் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவ வேண்டும். தமிழக அரசால் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

நன்கொடையாளர்கள், https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற வெப்சைட் முகவரியில் வங்கி, டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.

பொதுமக்கள் தங்களது நன்கொடையை குறுக்கு கோடிட்ட காசோலை, வங்கி வரைவோலை மூலம் கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்:

அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர், முதல்வர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600009, தமிழ்நாடு, இந்தியா.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

Electronic Clearring System(ECS) மூலம் வங்கிக்கு நேரடியாக அனுப்ப வேண்டிய விவரம்:
வங்கி பெயர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
கிளை: தலைமைச் செயலகம், சென்னை - 600009.
சேமிப்பு கணக்கு எண்: 117201000000070.
IFSC: IOBA0001172,
CMPRF PAN: AAAGC0038F

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+