கஜா.. 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.. 3 அடிக்கு கடல் நீர் மட்டம் உயரும்: வானிலை மையம்
Recommended Video

சென்னை: கஜா புயல் கரையை நெருங்கும்போது கடல் நீர்மட்டம் 1 மீட்டர் உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இன்று பகல் 1 மணியளவில் நிருபர்களை பாலச்சந்திரன் வானிலை நிலவரம் குறித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கஜா புயல் இப்போது எங்கே மையம் கொண்டுள்ளது என்பது குறித்தெல்லாம் தெரிவித்தார்.
மேலும், பாலச்சந்திரன் அளித்த பேட்டியை பாருங்கள்:
[ரெட் அலெர்ட் அச்சப்படுத்த இல்லை முன்எச்சரிக்கைக்காக... ஆர். பி. உதயகுமார் விளக்கம்!]

நவம்பர் 14 இரவு முதல் மழை
நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவில், புயல் மையம் கொண்டுள்ளது. நவம்பர் 15ம் தேதி பிற்பகல், நாகை மற்றும் சென்னை நடுவே கரையை கடக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போதைய நிலவரப்படி நவம்பர் 14ஆம் தேதி இரவு முதல், புயல் கரையை கடக்கும் வரை, தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், கடலூர், புதுச்சேரி விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும்.

நூறு கிலோ மீட்டர்
புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 அல்லது சில சமயங்களில் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் வரும் 15ம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கன மழை
கனமழையை பொறுத்தளவில், தஞ்சை, திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், புதுவை, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல், மிக கனமழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் மிக மிகக் கனத்த மழை பெய்யக்கூடும்.

1 மீட்டர் உயரம்
கடல் நீர் மட்டம் உயர்வதை பொறுத்தளவில், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இயல்பை விட ஒரு மீட்டர் (3 அடி) அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரக் கூடும். சென்னையை பொறுத்த அளவில், அதிக அளவிலான வேகத்தில் காற்று வீச வாய்ப்பு கிடையாது. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications