கஜா புயல் பாதிப்பு.. 1 லட்சம் பேர் வெளியேறிய பரிதாபம்.. மீட்பு முகாம்களில் தங்க வைப்பு
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணமாக 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கஜா புயலை தொடர்ந்து தமிழகம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.
இரவு 12 மணியில் இருந்து 3 மணிக்கு இடையில் கஜா புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது, 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

பாதிப்பு
கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. இந்த நிலையில் கஜா புயல் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எந்த பகுதி மக்கள்
திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை, இராமேஸ்வரம், காரைக்கால் மாவட்ட மக்கள் பலர் மீட்பு முகாம்களுக்கு மாற்றபட்டுள்ளனர். இந்த 7 மாவட்டங்களில் புயல் மோசமாகி தாக்கி இருக்கிறது. இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அருகாமையில் உள்ள மீட்பு முகாம்களுக்கு சென்றுள்ளனர்.

எத்தனை பேர்
இதனால் பாதுகாப்பு இல்லாத இடங்களில் வசித்த 1 லட்சம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 20 ஆயிரம் குழந்தைகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்

எத்தனை முகாம்
இந்த 7 மாவட்டங்களில் மொத்தம் 520 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 15000க்கும் அதிகமான பணியாளர்கள் மீட்பு பணிக்காக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications