கஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில் திடீர் மாற்றம்
கஜா புயலில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: கஜா புயலில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் நாளை மாலைதான் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் புயல் பாதிப்பு ஏற்படும். தமிழகம் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த புயல் பாம்பன் கடலூர் அருகே கரையை கடக்கும். இன்று மாலை இந்த புயல் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கிவிடும்.
[வருகிறது கஜா புயல்.. இன்றிலிருந்து கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை]

குழப்பமான புயல்
இந்த புயலுக்கு கஜா என்று பெயர் வைத்ததற்கு பதில் குழப்பம் என்று பெயர் வைத்து இருக்கலாம். அந்த அளவிற்கு இந்த புயல் வானிலை மையத்தை குழப்பி வருகிறது. முதலில் ஸ்ரீஹரிகோட்டா அருகே இந்த புயல் கடக்க இருந்தது. அதன்பின் சென்னை கடலூர் அருகே கடக்கும் என்று கூறப்பட்டது. இப்போது பாம்பன் கடலூர் அருகே கடக்க உள்ளது. இந்த புயலில் தற்போது புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

புயலில் மாற்றம்
இந்த நிலையில் கஜா புயல் கரையை கடப்பதில் புதிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நாளை மாலைதான் புயல் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாளை மதியம் கரையை கடக்காது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

என்ன காரணம்
புயலின் வேகம் குறைந்த காரணத்தால் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. புயல் இன்று காலை வரை 10-20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. ஆனால் இன்று காலையில் திடீர் என்று வேகம் குறைந்துள்ளது. தற்போது 6கிமீ வேகத்தில்தான் இந்த புயல் செல்கிறது.

ஆனாலும் மழை
அதே சமயம் கண்டிப்பாக இன்று இந்த புயல் அதி தீவிர சூறாவளி புயலாக மாறுவது உறுதி என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று மாலை தமிழகத்தில் மழை பெய்யும். பெரும்பாலும் இன்று இரவில் இருந்து புயலின் வேகமும் அதிகரிக்கும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications