வருகிறது கஜா புயல்.. இன்றிலிருந்து கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை
கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
சென்னை: கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
கஜா புயல் இன்று அதி தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் வேகமாக தமிழகத்தை நெருங்கி வருகிறது.
இன்று மாலை இந்த புயல் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கிவிடும். அதன்பின் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

எங்கு கரையை கடக்கும்
கஜா புயல் திசை மாறியதால் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கிறது. புயலால் சென்னைக்கு பெரிய பாதிப்பு இல்லை. புயல் கடக்கும் போது சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

எப்போது கடக்கும்
இந்த புயல் நாளை மதியம் கரையை கடக்க உள்ளது. ஆனால் இன்றே இதனால் அதிக அளவில் மழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இதனால் கனமழை பெய்யும்.

எங்கு எல்லாம் பெய்யும்
விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் புயல் பாதிப்பு ஏற்படும். தமிழகம் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை எப்படி
இந்த புயலால் சென்னைக்கு பெரிய பாதிப்பு இருக்கிறது. இன்றும், நாளையும் சென்னையில் லேசான மழை பெய்யும். ஆனால் இந்த மழையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications