பிரபல பாடகர் கானா பாலா அதிரடி.. யாரை எதிர்த்து போட்டி..? புளியந்தோப்பில் எகிறும் எதிர்பார்ப்பு..!
புளியந்தோப்பு கானா பாலா சுயேச்சையாக போட்டியிட போகிறார்
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார் கானா பாலா.. அதிலும் சொந்த மண்ணில் போட்டியிட போவதால், புளியந்தோப்பில் அனைவரது எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.
இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்து வருகிறது.. வேட்புமனு தாக்கலும் இன்றோடு நிறைவடைகிறது.
திமுக கூட்டணி தவிர அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் என எல்லாருமே தனித்தனியாக போட்டியிட போகிறார்கள்.. இவர்களுக்கு நடுவில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குகிறது.

விஐபிக்கள்
இதைதவிர, அவரவர் சொந்த பகுதியில் பிரபலமானவர்கள், விஐபிக்கள், மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர்... அந்த வகையில், பிரபல கானா பாடகர் பாலாவும் சுயேச்சையாக தேர்தலில் களம் காண்கிறார். புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கானா பாலா.. இவரது முழுபெயர் பாலமுருகன்... கானா பாடல்கள் மூலம் பிரபலமானவர்.. தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்... இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் ஹிட் ஆகி விடும்.. இவர் ஒரு வக்கீலும் கூட....

சுயேட்சை
இப்போது, சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6வது மண்டலம், 72வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.. பாலா போட்டியிடுவது இது முதல்முறை கிடையாது.. கடந்த 2006 ஆண்டு மற்றும் 2011 ம் ஆண்டு தேர்தலிலேயே இதே வார்டில் பாலா போட்டியிட்டு 2வது இடத்தை பிடித்தவர்.. அப்போதே 4 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றவர்.. இத்தனைக்கும் இவரது அண்ணன் கபிலன் பாஜகவில் இருக்கிறாராம்.. எனினும் தனித்தே களமிறங்குகிறார் பாலா.

தேவைகள்
இந்த தொகுதியை பொறுத்தவரை பாலாவுக்கு அத்துபடி.. அவர் பிறந்து வளர்ந்த மண் என்பதாலும், அங்குள்ள மக்களுக்கு என்னென்ன அடிப்படை தேவை என்பதையும் நன்றாக அறிந்தவர்.. ஏற்கனவே தொகுதியில் போட்டியிட்ட அனுபவமும் உள்ளதால், இந்த முறையும் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.. அப்படி வெற்றி பெற்றால், தன் மக்களின் தேவைகளையும் செய்து முடிப்பேன் என்று உறுதி கூறுகிறார்..

நாடித்துடிப்பு
பாலாவை பொறுத்தவரை, மக்கள் நலனை பற்றி அதிகம் சிந்திப்பவர்.. எத்தனையோ விழிப்புணர்வுகளை தன் பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.. நிறைய உதவிகளை சத்தமில்லாமல் செய்பவர்.. தன் இருப்பிட மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவர் என்ற அதீத பலம்தான் போட்டியிடும்வரை இப்போது கொண்டு வந்து விட்டுள்ளது.. எனினும் கானா பாடல்களின் மூலம் மக்களை கவர்ந்தவர், வேட்பாளராகவும் கவர்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்..!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications