Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு.. கடற்கரைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நிறுவப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. இதை காண்பதற்காக ஏராளமான மக்கள் கடற்கரைகளில் கூடினர்.

விநாயகர் சதுர்த்தி கடந்த மாதம் 31-ந்தேதி நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தன.

சென்னையில் 4 இடங்களில்

சென்னையில் 4 இடங்களில்

தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. இன்று சென்னை மற்றும் பல இடங்களில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகளை கரைக்க சென்னையில் 4 இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மதியம் 12 மணி முதல் 8 மணி வரை விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஊர்வலம் நடக்கும் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்தது.

முன்னேற்பாடுகள்

முன்னேற்பாடுகள்

விநாயகர் சிலைகளை கரைக்க சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், நீலாங்கரை பல்கலைநகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் பிரமாண்ட விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு சிலைகளை கரைக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக பிரமாண்ட பெரிய சிலைகளை தூக்கி சென்று கரைப்பதற்கு ஏதுவாக டிரோலியும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதேபோல் படகில் சென்று கரைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

சிலைகளை கரைக்கும் கடற்கரைகளில் அவசர உதவிக்காக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருந்தனர். விநாயகர் ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெறுவதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் 15 ஆயிரம் போலீசார் மற்றும் 2 ஆயிரம் ஊர்க்காவல்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டிருந்தார். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது ஏதும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கடற்கரைகளில் திரண்ட மக்கள் கூட்டம்

கடற்கரைகளில் திரண்ட மக்கள் கூட்டம்

இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. விடுமுறை தினம் என்பதால் ஏராளமான மக்கள் கடற்கரைகளில் திரண்டனர். விநாயர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குறிப்பிட்ட கடற்கரைகளுக்கு கொண்டு வரப்பட்டு கரைக்கபட்டன. விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை பார்த்த ஏராளமான மக்கள் கடற்கரைகளில் கூடினர். சிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான சிலைகள் கரைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் மாலை 5 மணி நேரப்படி 300க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+