இளையராஜா விவகாரம்.. பேசுறவன் முட்டாள்.. அறிவே இல்லாத நாய்... கங்கை அமரன் கடும் கோபம்
சென்னை: அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில் இளையராஜாவுக்காக தாம் எழுதிக் கொடுத்ததாக கூறுவது முட்டாள் தனம் என்று அவரது சகோதரரும் பாஜக பிரமுகருமான கங்கை அமரன் கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை அண்ணல் அம்பேதக்ருடன் ஒப்பிட்ட ஒரு புத்தகம் அண்மையில் வெளியாகி இருந்தது. இப்புத்தகத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார்.

இளையராஜா சர்ச்சை
அந்த முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பல திட்டங்கள், அம்பேத்கரது சிந்தனையை அடிப்படையாக கொண்டவை; முத்தலாக் தடை சட்டம் போன்றவற்றால் அம்பேத்கர் பெருமிதப்பட்டிருப்பார் என இளையராஜா எழுதி இருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையானது. இருந்த போதும் பிரதமர் மோடி குறித்த கருத்துகளை திரும்பப் பெற முடியாது என இளையராஜா கூறினார்.

நான் எழுதி தந்தேன?
இதனிடையே ஐ தமிழ்-க்கு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் இளையராஜா சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கங்கை அமரன் அளித்த பதில்: இளையராஜாவுக்கு பதில் நான் முன்னுரை எழுதி கொடுத்தேன் என்பவர்கள், இளையராஜாவுக்கு பதில் நான் இசை அமைத்தேன் என்பார்களா? அப்படி சொல்வார்களா? இளையராஜா அப்படி எழுதி இருக்கிறார்... இப்படி எழுதி இருக்கிறார் என நோண்டி நோண்டி ஆராய்ச்சி செய்கிறார்கள்.

முட்டாள், அறிவே இல்லாத நாய்
15,16 புத்தகம் எழுதின அறிவாளிக்கு நான் முன்னுரை எழுதி கொடுத்தேன்னு எவன் சொன்னான்? என்னய்யா பெரிய சமூகம் சமூகம்? நேரா என்கிட்ட போய் குற்றவாளி மாதிரி இளையராஜாவுக்கு நீதான் முன்னுரை எழுதின என கேட்கிற? யோவ்... பொறுய்யா... பொறுய்யா.. ஆமா நான் தான் எழுதினேன்.. அந்த முன்னுரை நான் தான் எழுதினேன்.. நீ என்ன பண்ணுவ? இப்படி எல்லாம் பேசுறவன் முட்டாள், அறிவே இலாத நாய்..
Recommended Video

திருமாவுடன் ஒப்பிடலாமா?
மோடியை ஏன் அம்பேத்கருடன் ஒப்பிடக் கூடாது? மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது என் இஷ்டம்.. எனக்கு பிடிக்கும்... ஏய்.. அம்பேத்கர் என்ன சொன்னார்னு உனக்கு தெரியுமா? ஏய்.. பொறுய்யா.. வாயை மூடு..ஏய்... அம்பேத்கர் என்ன சொன்னார்னு தெரியுமா? இளையராஜா எழுதின முன்னுரையை படிச்சியா நீ? அம்பேத்கரை திருமாவளவுடன் ஒப்பிட்டு பேசுகிறீங்க.. மோடியுடன் ஏன் ஒப்பிட்டு பேசக் கூடாது? இவ்வாறு கங்கை அமரன் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications