பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0.. பெண்களுக்கான அருமையான திட்டம்..இலவச சிலிண்டர் வேணுமா? இதை படிங்க
சென்னை: உஜ்வாலா 2.0 திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்பட்டு வரும்நிலையில், இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?
வறுமைக் கோட்டிற்குகீழே வாழும் பெண்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் மத்திய அரசு கொண்டுவந்த திட்டம்தான், உஜ்வாலா யோஜனா 2.0 திட்டமாகும்.. உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில், கடந்த 2016ல் பிரதமர் மோடியால், கொண்டுவரப்பட்ட திட்டம் இதுவாகும்..

பெண்கள்: வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம் உஜ்வாலா யோஜனா திட்டமாகும். இதற்காகவே, மத்திய அரசு ரூ.8,000 கோடியை ஒதுக்கி செயல்படுத்திவருகிறது.
இந்த திட்டத்தினால் நாடுமுழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகவே பலனடைந்து வருகிறார்கள். அதன்படி, ஒவ்வொரு புதிய பயனாளிக்கும் ரூ.1,600 நிதியுதவியும் தரப்படுவதால், பயனாளிகள் இதை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம்.. கேஸ் சிலிண்டரை நிரப்பி கொள்வது அல்லது எல்பிஜி அடுப்பு பெற்றுக்கொள்ளலாம்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த திட்டம் உள்ள நிலையில், பெண்கள் இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா? இதன் தகுதிகள் என்னென்ன தெரியுமா?
தகுதிகள்: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின்கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு பெற முடியும்... விண்ணப்பிக்கும் பெண், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அதேபோல, அவருக்கு இதுவரை சமையல் சிலிண்டர் இணைப்பு எதுவும் இல்லாதிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்திய பிரஜையாக இருக்க வேண்டும். இவ்வளவு தகுதியும் இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரிலேயே சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.
இதைத்தவிர, பட்டியல் வகுப்பு/பழங்குடி குடும்பங்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், அந்த்யோத்யா அன்ன யோஜனா, காட்டு வாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழுள்ளவர்களும் இந்த திட்டத்தின்மூலம் பலன்பெறலாம்.
தேவையான ஆவணங்கள்: நகராட்சி தலைவர் (நகர்ப்புற பகுதி) அல்லது பஞ்சாயத்து தலைவர் (கிராமப்புற பகுதி) வழங்கிய வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கான சான்றிதழ், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நம்பர், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜாதி சான்றிதழ், முகவரி ஆவணம், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் போன்றவை கட்டாயம் வேண்டும். ள
எப்படி விண்ணப்பிப்பது
- www.pmuy.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் சென்று, உஜ்வாலா 2.0 திட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
- விண்ணப்ப படிவத்தில் கேட்டுள்ள, பெயர், முகவரி, ஜன்தன் கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
- இப்போது, அடையாள ஆவணங்கள் அனைத்தையும் அப்லோடு செய்ய வேண்டும்
- இறுதியில், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications