கேஸ் சிலிண்டர்கள் இருக்கா? நேரா வீட்டுக்கு வர்றாங்களாம் ஆபிசர்ஸ்.. ரெடியா இருங்க.. தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. என்ன சொல்கிறது தமிழக அரசு?
தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன.. கடந்த மே 2021 முதல் இப்போதுவரை 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும், புதிய ரேஷன் கார்டுகள் கேட்டும், பெரும்பாலானோர் விண்ணப்பிக்க துவங்கிவிட்டனர்..

ஆனால், புதிய ரேஷன் கார்டுகளை யாருக்கும் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், எப்படியும் 3 மாதங்கள் கழித்துதான் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றும் 2 மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன.
கார்டுகள்: இதற்கு காரணம், ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் இன்னொரு கார்டு கேட்டும் விண்ணப்பித்து வருகிறார்களாம்..
இதனால் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் எக்கச்சக்கமாக பெருகிவிட்டதாம். இதனால், தங்களுக்கு வந்து சேரும் விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதையெல்லாம் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
விண்ணப்பம்: ஆனால், புதிய கார்டு வேண்டி, தனி சமையல் அறையுடன் வசிப்போர், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள், புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படையான விஷயம். அதனால்தான், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, திடீரென கூட்டுறவுத்துறையினருடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் கடந்த வாரம் ஈடுபட்டார்..
அப்போது, தகுதியான நபருக்கு குறித்த காலத்தில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்றும், ரேஷன் கடைகளுக்கு அனைத்து தானியங்களையும் அனுப்ப வேண்டும் என்றும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.. எனவே, தனி சமையல் அறையுடன் வசிப்போர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டுகள் கிடைத்துவிடும் என்றும் நம்பிக்கை துளிர்த்தது.
கள ஆய்வு: இந்நிலையில், அரசு அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது. அதாவது, புது ரேஷன் கார்டு விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு நேரடியாகவே சென்று, வீட்டை ஆய்வில் அதிகாரிகள் ஈடுபடபோகிறார்களாம்.. சம்பந்தப்பட்ட வீட்டில் கிச்சன் ஒன்று உள்ளதா? அல்லது 2 உள்ளதா? அடுப்பு ஒரு அடுப்பா? 2 அடுப்பா? யார் பெயரில் உள்ளது? ஒரு கேஸ் சிலிண்டரா? 2 கேஸ் சிலிண்டரா? அது யார் பெயர்களில் உள்ளது? என்பதையெல்லாம் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
ஒருவேளை, அந்த வீட்டில், புதிதாக திருமணம் ஆனவர்கள் என்றால், பழைய ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கி விட்டு, புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, திருமண பத்திரிகைகளையும் இணைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே புதிய ரேஷன் கார்டுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்வார்கள் என்று தெரிகிறது.
அரசு உத்தரவு: அதாவது, சிலர் ரேஷனில் கூடுதல் சலுகைகளை பெறுவதற்காக, ஒரே குடும்பத்தில் தாய், தந்தை பெயரில் ஒரு ரேஷன் கார்டும், மகன், மருமகள் பெயரில் மற்றொரு ரேஷன் கார்ட்டிற்கும் விண்ணப்பித்திருக்கிறார்களாம். எனவே, ரேஷன் கார்டிற்கு விண்ணப்பிக்கும் பொது மக்களின் வீட்டிற்கு கள ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
ஒரு குடும்பத்திற்கே 2, 3 ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டு, தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என்பதே அதிகாரிகளின் ஒரே நோக்கமாக இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications