Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேஸ் சிலிண்டரில் மாற்றம்.. வீட்டு சமையல் சிலிண்டர் சப்ளையில் அதிரடி.. இனிமேல் இப்படித்தானாம்.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேஸ் சிலிண்டர்கள் குறித்து, முக்கிய அதிரடியை இந்தியன் ஆயில் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.. இதற்கான சலுகை அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், பல்வேறு அதிரடிகளை அறிவிப்புகளை, நுகர்வோர்களின் வசதிக்காக அறிவித்து வருகிறது. அந்தவகையில், கடந்த மாதத்தில் மட்டும் 2 வகையான அறிவிப்புகளை வெளியிட்டு, நுகர்வோர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருந்தது.

Gas Cylinder Supply and Indian Oil Corporations major Announcement about gas cylinder Supply in houses

அயர்ன் பாக்ஸ்: முதலாவதாக, 5 கிலோ எல்பிஜி சிலிண்டரில் இயங்கக்கூடிய, அயர்ன்பாக்ஸ்களை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தப் போவதாக அறிவிப்பை வெளியிட்டது.. இந்த அயர்ன்பாக்ஸ்கள், வெறும் 2 நிமிஷங்களிலேயே சூடாகிவிடுமாம்..

சமையல் கேஸ்: வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துவது போலவே, தள்ளுவண்டியில் பாதுகாப்பாக இந்த அயர்ன்பாக்ஸை பயன்படுத்த முடியும் என்றும், கரியை எரிப்பதால் வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடு போன்றவற்றால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பும் ஏற்படாது என்றும் இந்த நிறுவனம் சார்பில் நம்பிக்கை தரப்பட்டுள்ளது.

எனவே, இத விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது.. அதேபோல, வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும்கூடிய, சமையல் காஸ் சிலிண்டர்களை, இதே நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆனால், இரண்டிற்கும் ஒரே வகையான ரெகுலேட்டரும், ரப்பர் குழாயும் பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு: இவைகளில், வீடுகளுக்கான ரெகுலேட்டர், ரப்பர் குழாயை, இந்தியன் ஆயில் நிறுவனமே விற்பனை செய்கிறது.. அவை அதிக பாதுகாப்புடன் தரமாக உள்ளன என்றாலும், வீடுகளுடன் ஒப்பிடும்போது, வணிக பயன்பாட்டிற்கு சிலிண்டர் சற்று அதிகமாகும்..

எனவே, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு சந்தையில் கிடைக்கும் ரெகுலேட்டர், ரப்பர் குழாய்களை பயன்படுத்துவதால், அவை தரமற்று இருப்பதாகவும், இதன்காரணமாக நிறைய விபத்துக்களை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான், வணிக சிலிண்டருக்கும், புது ரெகுலேட்டரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது..

தனியாக உயர் அழுத்த மாறுபாடுகளை தாங்கும் திறனில் இந்த ரெகுலேட்டர்கள் உள்ளதுடன், புதிதாக ரப்பர் குழாயையும், இந்த நிறுவனம் அறிமுகம்செய்ய போவதாக அறிவித்துள்ளது.. அதுமட்டுமல்ல, 5 வருடத்துக்கு ஒரு முறை கேஸ் சிலிண்டர் ரப்பர் குழாயை மாற்ற வேண்டும்.. ஆனால், பலபேர், அந்த ரப்பர் குழாயை மாற்றுவதே கிடையாது. இப்படி, மாற்ற வேண்டிய கஸ்டமர்களின் விபரம், கேஸ் ஏஜன்சிகளிடம் உள்ளது.

சிறப்பு சலுகை: அதனால், அவர்களை தொடர்பு கொண்டு, ரப்பர் குழாய் மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.. அதுமட்டுமல்ல, இதற்கு சிறப்பு சலுகையாக, ரப்பர் குழாய் விலையானது, 190 ரூபாயிலிருந்து, 155 ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறதாம். அதனால், உரியவர்கள் உடனடியாக, இந்த சலுகையை பயன்படுத்தி, ரப்பர் குழாயை மாற்றி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்னொரு சிறப்பு அதிரடியை வெளியிட்டுள்ளது.. அதாவது, ஐஓசி எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு, தமிழகத்தில் மட்டுமே 1.48 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு, 925 காஸ் ஏஜன்சிகள் வாயிலாக, தினமும் சராசரியாக, 2.50 லட்சம் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

முன்பதிவுகள்: அதிலும், முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. ஏஜென்சி ஊழியர்களும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, சிலிண்டர்களை வினியோகம் செய்கிறார்கள்.. ஞாயிற்றுக்கிழமை மட்டும் வாரவிடுமுறை உள்ளது.

ஆனால், கஸ்டமர்களுக்கு சிலிண்டரை விரைந்து வினியோகிக்க வேண்டும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காகவே இனிமேல், ஞாயிற்றுக்கிழமை உட்பட, வாரத்தின் அனைத்து நாட்களும் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட உள்ளதாம். இந்த தகவலானது, பொதுமக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+