கேஸ் சிலிண்டர் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு.. வர்ற 26ம் தேதி மறக்காதீங்க.. அரசு முடிவு என்ன?
சென்னை: தமிழகத்தில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் அனைத்து சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் அக்டோபர் 26ம் தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், சிலிண்டர் தேவைப்படுபவர்கள் முன்னதாகவே புக் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், இந்தியன், எச்பி, பாரத் கியாஸ் ஏஜென்சி நிறுவனங்களிலிருந்து மக்கள் அதிகளவில் கேஸ் சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்..

லோடுமேன்கள்: இந்த ஏஜென்சிகளின் கீழ் சிலிண்டர் டெலிவரி செய்யும் டெலிவரிமென், மெக்கானிக், டிரைவர்கள், குடோன் கீப்பர், லோடுமேன்கள், பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை, பல்வேறு தருணங்களில் முன்வைத்து வந்தனர். அவர்களது கோரிக்கைகள் ஏற்காத பட்சத்தில் தற்போது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.
குறைந்தபட்ச ஊதியத்தை முழுமையாகவும், அகவிலைப்படி முறையாக தொடர்ந்து உயர்த்தி வழங்க வேண்டும், சட்டப்படி வழங்கவேண்டிய தீபாவளி போனஸ் ரூ.12 ஆயிரமாக வழங்கவேண்டும், ஒருநாள் சம்பளத்துடன் வார விடுமுறை வழங்கவேண்டும், அரசு விடுமுறை நாட்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கவேண்டும், வருடத்துக்கு 15 நாள் சம்பளத்துடன் கூடிய ஆண்டு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
அறிவிப்பு: வரும் அக்டோபர் 26-ம் தேதி தமிழக அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமென் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தத்தில், எப்படியும் 50,000 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எனவே, அன்றைய தினம் சிலிண்டர் டெலிவரி செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், சிலிண்டர் தேவைப்படுபவர்கள் முன்னதாகவே புக் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்: இதனிடையே, இந்த போராட்டம் குறித்து, மாநில தலைவர் சிவக்குமார், துணைப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் இந்த வேலை நிறுத்த அறிவிப்புக்கான காரணத்தை கூட்டாக விளக்கியிருக்கிறார்கள்.
அதில், "எல்பிஜி சிலிண்டர் நிறுவனங்கள் ஏஜென்சியின் கீழ் சிலிண்டர்கள் டெலிவரி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துகிறார்கள்.. இந்த ஏஜென்சிகள் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்குவதில்லை... இதை பற்றி எல்பிஜி நிறுவனத்திடம் கேட்டால், ஏஜென்சியிடம் கேளுங்கள் என்கிறார்கள்.. ஆனால் ஏஜென்சிகளோ, சில தொழிலாளர்களை மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்கள் என அடையாளம் காட்டி ஊதியம் வழங்குகிறார்கள்.
ஊதியம்: பல தொழிலாளர்களுக்கு வெறும் யூனிபார்ம்களை மட்டுமே வழங்கிவிட்டு, ஊதியம் வழங்காமல் ஏமாற்றுகிறார்கள்.. இதனால், தொழிலாளர்களின் உழைப்பு வீணாகிறது...
இதை ஏஜென்சிகளிடம் சொன்னால், பணிக்கு வர வேண்டாம் என்று சொல்லி மிரட்டுகிறார்கள்.. எனவே,தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஏற்கனவே சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி அக்டோபர் 26ம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவதாக முடிவு செய்துள்ளோம்.. ஒருவேளை இதிலும் எங்களுக்கு முடிவு கிடைக்காவிட்டால், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.
பண்டிகை: பண்டிகை காலம் துவங்கிவிட்ட நிலையில், தீபாவளி பண்டிகையும் நெருங்கி வரும்நிலையில், டெலிவரிமேன்கள் ஸ்டிரைக் இப்படி அறிவித்துள்ளது, பொதுமக்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது. ஏற்கனவே ஆங்காங்கே கேஸ் விநியோகத்தினால் தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும்நிலையில், ஊழியர்களின் வேலைநிறுத்தம் மேலும் சிக்கலாகிவிடும் என்பதால், தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக அரசு விரைந்து எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகளிடம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications