கேஸ் சிலிண்டர் வைத்திருக்கிறீர்களா? சமையல் சிலிண்டரில் கசிவு வந்தால் உடனே இதை பண்ணுங்க.. செம டிப்ஸ்
சென்னை: கேஸ் சிலிண்டர் உபயோகிக்கும்போது ஒருசில விஷயங்களை பின்பற்றினாலே, மிகப்பெரிய ஆபத்துக்களை தவிர்க்கலாம்.. சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதோ குட்டி குட்டி டிப்ஸ்களை பார்க்கலாம்.
எப்போதுமே கேஸ் சிலிண்டரை பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைத்து உபயோகித்தே பயன்படுத்த வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை உள்ள அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கேஸ் ஸ்டவ்வை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவிட்டு, அதற்கு பிறகே வால்வை மூட வேண்டும். அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு, சிலிண்டரை மாற்ற வேண்டும்.. ஏதாவது ரிப்பேராகிவிட்டால், விற்பனையாளர்களை அழைத்து சரிசெய்ய வேண்டுமே தவிர, நாமே தெரியாத விஷயத்தில் இறங்கிவிடக்கூடாது.
ரப்பர் குழாய்கள்: கேஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பது தெரிந்தால், வீட்டிலுள்ள அனைவரையும் வீட்டை விட்டு வெளியே வரச்சொல்ல வேண்டும்.. கதவுகள், ஜன்னல்களை திறந்துவிட வேண்டும். சிலிண்டர் வால்வை அழுத்தி மூடிவிட வேண்டும். ஒருவேளை மாற்று சிலிண்டர்களை இணைக்க நேர்ந்தால், பூஜை விளக்குகள், ஊதுவத்தி, தீக்குச்சிகள் உட்பட கரண்ட் சம்பந்தமாக எதையுமே இயக்க கூடாது. பிறகு உடனடியாக குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிலிண்டரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்த வேண்டாம்... அப்படி நகர்த்தினால் கூடுதல் ஆபத்து ஏற்படுத்திவிடும்... கிச்சனில் Exhaust Fan (எக்ஸாஸ்ட் ஃபேன்) இருந்தால் உடனடியாக நிறுத்திவிட வேண்டும்.. அப்போதுதான் சிலிண்டர் வாயு வெளியேறும்..
சிலிண்டர் வாசனை: சிலிண்டர் கசிவு ஏற்பட்டால், உடலில் அரிப்பு, எரிச்சலை தந்துவிடும்.. எனவே, உடனடியாக கண்களை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.. உங்கள் உடைகளில் கேஸ் சிலிண்டர் வாசனை இருந்தால், உடனடியாக ஆடைகளை அகற்றிவிட்டு, உடலை தண்ணீரில் நன்றாக கழுவலாம்.
தொடர்ந்து சரும எரிச்சல் இருந்தால், மருத்துவரை நாட வேண்டும். அதேபோல, விபரீதத்தை உணர்ந்து ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். தீயணைப்பு மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவி செய்வார்கள்.












Click it and Unblock the Notifications