"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை
சென்னை: டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கலக்கல் வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார். இதற்கிடையே வெற்றிக்குப் பிறகு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக விரிவாக நாம் பார்க்கலாம்!
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றி பயிற்சியாளராக கௌதம் கம்பீருக்கு ஒரு முக்கிய அங்கீகாரமாக இருக்கிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் தோல்விகளுக்குப் பின் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக டி20 கோப்பை அமைந்துள்ளது.

டி20 இறுதிப் போட்டி
இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் மூன்று T20 உலகக் கோப்பைகளை (2007, 2024, 2026) வென்ற முதல் அணியாகவும், சொந்த மண்ணில் பட்டத்தைத் தக்கவைத்த முதல் அணியாகவும் திகழ்கிறது. இதற்கிடையே உலகக் கோப்பையை வென்ற பிறகு கம்பீர் கூறிய சில கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் யாருக்குப் பொறுப்பு என்பது எனக்குத் தெரியும்.. சமூக வலைத்தளங்களில் உள்ளவர்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை. டீமில் இருக்கும் 30 பேரிடம் மட்டுமே நான் பொறுப்பு. ஒரு டீம் எவ்வளவு நன்றாக இருக்கிறதோ.. அதே அளவு தான் பயிற்சியாளருக்கும் பெயர் கிடைக்கும். வீரர்கள் அனைவரும் சேர்ந்து தான் என்னை இந்தளவுக்கு அழைத்து வந்தனர்" என்றார்.
அந்த இரண்டு பேர்
வெற்றிப் பெருமிதத்திலும், கம்பீர் 2024-ல் அணியை வழிநடத்திய ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்செலென்ஸ் தலைவரான விவிஎஸ் லக்ஷ்மணை மறக்கவில்லை. அவர் மேலும் கூறுகையில், "இந்தக் கோப்பையை டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஆகியோருக்கு அர்ப்பணிக்கிறேன். இந்திய அணியைச் சரியான நிலையில் நிறுத்திய ராகுல் பாய்க்கும், சென்டர் ஆஃப் எக்செலென்ஸில் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கிய லக்ஷ்மணுக்கும் எனது நன்றி. கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் நேர்மையாகச் செயல்பட்ட அகர்கருக்கும், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா தோல்விகளுக்குப் பிறகும் எனக்குப் பக்கபலமாக இருந்த ஜெய் பாய்க்கும் நன்றி" என்றார்.
அதிரடி
இந்திய அணி இறுதி போட்டியில் வழக்கம் போல பேட்டிங்கில் அதிரடி காட்டியது. 20 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை குவித்தது. பின்னர் நியூசிலாந்து அணியை 159 ரன்களுக்குள் சுருட்டி, எளிதாக வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 89, அபிஷேக் சர்மா 52, இஷான் கிஷன் 54 ரன்கள் குவித்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். பந்துவீச்சில், ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அக்ஸர் படேலும் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சூர்யகுமார் யாதவ்
இந்திய அணியின் திறமை குறித்து கம்பீர் மேலும் பேசுகையில், "தோல்வி குறித்த பயத்தை நாம் கைவிட வேண்டும்; 250 ரன்கள் அடிக்கத் துணிச்சல் காட்டுவதுதான் எங்கள் சிறப்பம்சம். சூர்யா என் வேலையை எளிதாக்கினார். அவர் ஒரு மிக சிறந்த கேப்டன். கோப்பைகளைக் கொண்டாடுவதே பெரிய நோக்கம், தனிப்பட்ட மைல்கற்கள் அல்ல. பல ஆண்டுகளாக நாம் தனிப்பட்ட மைல்கற்களைக் கொண்டாடி வருகிறோம். அதை நிறுத்துமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications