வானதி அக்கா பக்கத்தில் உட்கார்ந்துகிட்டு இப்படி பேசலாமா? அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் காயத்ரி கேள்வி
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் குழு உறுப்பினராக உள்ள வானதி சீனிவாசனை பக்கத்தில் வைத்துக் கொண்டே கூட்டணி குறித்து பேசுகிறீர்களா என பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணியில் ஏற்கெனவே விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிகப் பெரிய பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டார்.
அந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்வேன். ஒரு தொண்டனாக இந்த கட்சிக்கு பணியாற்றுவேன் என தெரிவித்திருந்தார்.

வானதி
இந்த பேச்சுக்கு மேடையிலேயே வானதி, கரு நாகராஜன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரம் இதுவல்ல. இப்போது தமிழகத்தில் எந்த தேர்தலும் நடைபெறவில்லை. கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவெடுக்கும் என கூறியிருந்தனர். மேலும் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அதிமுக தரப்பிலும் பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

நட்டா கருத்து
அது போல் கிருஷ்ணகிரிக்கு கட்சி விழா ஒன்றுக்கு வந்த தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்றும் இந்த கூட்டணியில் விரும்பத்தகாத செயல்களை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் அவரது பேச்சை மீறி மாநில தலைவர் அண்ணாமலையே இப்படி பேசியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

நயினார் நாகேந்திரன்
இதுகுறித்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியிருந்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. தேர்தல் கூட்டணியை பொருத்தமட்டில் தேசிய தலைமைதான் முடிவு எடுக்கும். தமிழகத்தில் எந்த கட்சியும் கூட்டணி அமைக்காமல் போட்டியிடுவதில்லை. இந்த நேரத்தில் அண்ணாமலை இந்த பேச்சை தவிர்த்திருக்கலாம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.

ஓ எஸ் மணியன் குற்றச்சாட்டு
அது போல் இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கூறுகையில் கூட்டணியை பொருத்தமட்டில் அதிமுகதான் முடிவு செய்யும் என கூறியிருந்தார். மேலும் ஆதி ராஜாராம், கூட்டணியை முறித்துக் கொண்டால் போகட்டும், மகிழ்ச்சிதான். சொந்த கட்சியினரையே வேவு பார்க்கும் அண்ணாமலை என கடுமையாக விமர்சித்திருந்தார்.

காயத்ரி ரகுராம் ட்வீட்
இதுகுறித்து பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: போராட்டத்திற்கான அடுத்த திட்டம். அண்ணாமலை இல்லாமல் பாஜக வளராது. (இது காந்தாரி சாபம்) ஒரு உருட்டல் எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்ட் தேர்தல் குழு உறுப்பினர் வானதி அக்கா உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார் ஆனால் நீங்கள் கூட்டணி பற்றி பேசுகிறீர்கள். நகைச்சுவை. ஒரு லட்சுமண ரேகாவை நீங்கள் பின்பற்றவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
-
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications