“பித்தலாட்டம் அண்ணாமலை”.. உங்களை காப்பாற்றுவது மோடி வேலையா? கேலி பண்றாங்க - கடுப்பான காயத்ரி ரகுராம்
சென்னை: ஆருத்ரா ஊழல் வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறிய ஆர்.எஸ்.பாரதியிடம் ரூ.500 கோடி இழப்பீடு பெற்று பிஎம் கேர்ஸுக்கு வழங்குவதாக அண்ணாமலை கூறிய நிலையில், தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு அவர் பிரதமர் மோடியை பயன்படுத்தி வருவதாக நடிகை காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் என்று கூறி கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ஒரு பிரசெண்டேசனை வெளியிட்டார். ஆனால், திமுகவினரின் சொத்துப் பட்டியலை மட்டுமே அண்ணாமலை வெளியிட்டு உள்ளதாக பலர் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், திமுக நிர்வாகிகள் மீதான அவதூறான ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாக கூறி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில், "திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் நற்பெயரைக் கலங்கப்படுத்தவும் அவதூறு செய்யவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறீர்கள். DMK FILES என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் நீங்கள் திமுக கட்சி மீது பல தவறான, அவதூறான, ஆதாரமற்ற, கற்பனையான குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளீர்கள்." என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்து உள்ளார்.
"உங்கள் பேச்சு/குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் விடியோவை நீக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 500,00,00,000 (ரூபாய் ஐந்நூறு கோடிகள் மட்டும்) எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்ய தவறினால், உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார்." என்று திமுக மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக தான் கூறிக்கொள்வது என ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி ரகுராம், "திமுக, அண்ணாமலையை விட்றாதீங்க. பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு, தன்னிடம் 4 ஆடுகள் மட்டுமே உள்ளது என்று கூறினால், அண்ணாமலையின் நண்பர்கள் பெரிய பணக்காரர்கள்.. அந்த ₹500 கோடியை அவரது தாராள நண்பர்களை கொடுக்கச் சொல்லுங்கள் அல்லது அவர் தனது நண்பர்களைக் கொடுக்கச் சொல்வார்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஆருத்ரா ஊழல் வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறிய ஆர்.எஸ்.பாரதியிடம் ரூ.500 கோடி இழப்பீடு பெற்று பிஎம் கேர்ஸுக்கு வழங்குவதாக அண்ணாமலை கூறி இருந்தார். இதுகுறித்து இன்று ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி, "திமுக அவதூறு வழக்கு தொடர்ந்து அண்ணாமலை அந்த ₹500 கோடியை PM Cares நிதிக்கு கொடுப்பாராம்.. இது என்ன நியாயம்? இது என்ன போங்கு? PM Cares நிதியை எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கேலி செய்கிறது. மோசடி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள். இப்போ அண்ணாமலை PM Cares நிதியை தேவையில்லாமல் இழுத்து வருகிறார். பித்தலாட்டம் அண்ணாமலை.

ஆருத்ரா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கேட்டீர்கள்.. பிறகு எங்கே தப்பிக்கப் பார்க்கிறாய்? அமெரிக்காவா? அண்ணாமலை. பிரதமரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அண்ணாமலையின் பித்தலாட்டம் முட்டாள்தனத்தை காப்பாற்றுவது பிரதமரின் வேலையா? பிஜேபியின் முக்கிய தலைவர்களின் பெயர்களை விருப்பப்படி பயன்படுத்தி பிரதமர் பெயரை விருப்பப்படி பயன்படுத்தி தப்பிப்பதா? பாஜக தேசிய கட்சி என்பதை அண்ணாமலை மறந்துவிட்டார். அவர் தனது தனிப்பட்ட குழப்பத்திற்காக மத்திய அலுவலகத்தையோ பிரதமரையோ இழுக்க முடியாது." என்று சாடி உள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications