சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன அசிங்கம் இது! வெளியான திருச்சி சூர்யா பெயரிலான ஆடியோ! யார் அந்த பெண்? கொதித்து எழுந்த காயத்ரி!

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக நிர்வாகி திருச்சி சூர்யாவின் ஆடியோ என்று இணையத்தில் ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. பாஜக நிர்வாகி டெய்சி சரணை கடுமையாக திட்டுவது போல இந்த ஆடியோ உள்ளது. இந்த ஆடியோவிற்கு பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் சமீபத்தில் இணைந்து ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் திருச்சி சூர்யா. திமுக எம்பி சிவாவின் மகனான இவர் திமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த பின் திமுக நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். திமுகவின் டாப் நிர்வாகிகள் சிலரை பற்றி கடுமையான சில விமர்சனங்களை வைத்து வந்தார். ஆனால் திமுக நிர்வாகிகள் இவருக்கு பெரிதாக பதில் அளித்துக்கொள்ளவில்லை.

ஆமா நீங்கள் எப்ப பாஜகவின் தலைவரானீர்கள்? சொந்த காசில் சூனியம்.. அண்ணாமலை டீம் மீது காயத்ரி தாக்கு ஆமா நீங்கள் எப்ப பாஜகவின் தலைவரானீர்கள்? சொந்த காசில் சூனியம்.. அண்ணாமலை டீம் மீது காயத்ரி தாக்கு

சூர்யா கைது

சூர்யா கைது

சமீபத்தில் மிரட்டல் வழக்கு ஒன்றில் திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டார். உளுந்தூர் பேட்டையில் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்றை மிரட்டியதாக புகார் வைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் பேருந்தை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டியதாக புகார் வைக்கப்பட்டது. சூர்யாவின் காரும் பேருந்தும் மோதிக்கொண்ட வழக்கில், சூர்யா அந்த பேருந்தை அபகரித்து மிரட்டியதாக புகார் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதன்பின் ஜாமீன் கிடைத்து சூர்யா வெளியே வந்தார். இந்த நிலையில்தான் தற்போது சூர்யா புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

மோதல்

மோதல்

ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா மற்றும் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறி ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இருவரும் பேசியதாக கூறப்படும், அதிகாரபூர்வமற்ற ஆடியோ ஒன்று இணையத்தில் உலவி வருகிறது. அதன்படி, பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் தனது துறைக்கு கீழே கமிட்டி உருவாக்குவதற்கு திருச்சி சூர்யா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது.

மோசமான மோதல்

மோசமான மோதல்

டெய்சி சென்னையை சேர்ந்த மருத்துவர். சமீபத்தில்தான் இவர் பாஜகவில் சேர்ந்து பதவி பெற்றார். இந்த நிலையில்தான் டெய்சியிடம் சூர்யா பேசுகையில் மோசமாக கெட்டவார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது. உன்னை தீர்த்துடுவேன் என்று சொல்வதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா பேசியதாக கூறப்படுகிறது. சூர்யாவின் இந்த ஆடியோ இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆடியோ தொடர்பாக அவரும் இதுவரை மறுப்பு எதுவும் வெளியிடவில்லை.

அண்ணாமலை

அண்ணாமலை

திமுக தலைவர்கள் பெண்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கடுமையாக சாடி இருந்தார். அதோடு பாஜகவின் மகளிர் அணி கூட திமுக தலைவர்களுக்கு எதிராக போராட்டம் செய்தது. இந்த நிலையில்தான் பாஜகவில் இருக்கும் கட்சி நிர்வாகி ஒருவர், பாஜகவில் உள்ள இன்னொரு பெண் நிர்வாகிக்கு எதிராக மிக கொச்சையாக பேசியது சர்ச்சையாகி உள்ளது. பாஜக மூத்த உறுப்பினர், அயலக மற்றும் வெளிமாநில தமிழர் நல பிரிவு செயலாளர் காயத்ரி ரகுராம் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

இது தொடர்பாக காயத்ரி வைத்துள்ள விமர்சனத்தில், பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. பொது இடத்தில் அழுக்குத் துணிகளை துவைக்கிறோம் என்று சொல்கிறார்கள் செ & கோ ட்ரோல்ஸ். ஆனால் சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜால்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு நம்மை ட்ரோல் செய்கிறார்கள் வார் ரூம், செல்வா & கோ.

புகார்

புகார்

புகார் எழுந்தபோது என்ன நடந்தது? நான் கோபமாக இருக்கிறேன். களப்பணி இல்லாமல் சிலர் ஜால்ரா மட்டும் செய்தால் இதுதான் நடக்கும். திருச்சி சூர்யா & கோ அல்லது செல்வா & கோ மீண்டும் எங்களை ட்ரோல் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். சைக்கோ மூளையால் மட்டுமே முடியும். என் இரத்தம் கொதிக்கிறது. கட்சியை குறை சொல்ல வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மை சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன்.. இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு, என்று கடுமையாக காயத்ரி ரகுராம் பாய்ந்து இருக்கிறார்.

English summary
Gayathri Raghuram condemns the alleged audio of Trichy Surya of BJP conversation with other party leader Daisy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X